2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

சிங்கரிடமிருந்து 4K Ultra HD Smart தொலைக்காட்சிகள்

Editorial   / 2017 ஜூன் 28 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிங்கர் ஸ்ரீ லங்கா, இலங்கையில் சிங்கர் Epic 4K Ultra HD Smart தொலைக்காட்சி உற்பத்தி வரிசையை அறிமுகப்படுத்தி, தனது உற்பத்தி வரிசையில், மற்றுமொரு புத்தாக்கமான உற்பத்தியைச் சேர்த்துக்கொண்டுள்ளது. கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற வைபவ ரீதியான அறிமுக நிகழ்வில், சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ், சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் துறை பணிப்பாளரான குமார் சமரசிங்க ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 

இலங்கையில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு தொலைக்காட்சி வர்த்தகநாமம் என்ற வகையில், சிங்கர், தொடர்ந்தும் புத்தாக்கத்தின் மூலமாக, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அதிசிறந்த உற்பத்திகளை, இலங்கையில் அதிகரித்துச்செல்கின்ற தனது வாடிக்கையாளர்கள் மத்தியில் அறிமுகம் செய்து வருகின்றது. திறன் (smart) தொடர்பில் தனிப்பட்ட எதிர்காலத்துக்கான அம்சங்கள் மற்றும் சௌகரியம் ஆகியவற்றை இணைத்து, நவீன சிறப்பம்சங்கள் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதில் மேம்பட்ட அனுபவத்துடன், தொலைக்காட்சி தொழில்நுட்பத்தில் புதிய பரிமாணத்தை, சிங்கர் அறிமுகப்படுத்தியுள்ளது. முற்றிலும், புதிய சிங்கர் Epic 4K Ultra Smart தொலைக்காட்சி உற்பத்தி வரிசையானது, சிங்கரின் உத்தரவாதம் மற்றும் பேணற்சேவை ஆதரவுடன், ஈடிணையற்ற விலையில், புத்தம்புதிய பொழுதுபோக்கு அனுபவத்தை, பாவனையாளர்கள் பெற்றுக்கொள்வதற்கு உத்தரவாதம் அளிக்கின்றது.  

தொலைக்காட்சியைப் பார்த்து மகிழ்வதற்காக, சிங்கர் Epic 4K Ultra Smart Android தொலைக்காட்சிகள் 49’, 55’, 60’, 65’, 75’ ஆகிய முகத்திரை அளவுகளில் கிடைக்கப்பெறுகின்றது. HDR தொழில்நுட்பத்தினூடாக வர்ண வெளிப்பாட்டை மேம்படுத்தி, அசையாமை மற்றும் மாறுபட்ட வர்ணக் காட்சிகளுக்கு துல்லியமான தெளிவை உடனடியாக வெளிப்படுத்துவது, இப்புதிய தொலைக்காட்சி வரிசையின் தனித்துவமான சிறப்பம்சங்களுள் ஒன்றாகும். வீட்டுக்குள்ளேயே சினிமா பார்க்கும் அனுபவத்தை, இப்புதிய உற்பத்தி வரிசை வழங்குவதுடன், அதன் உயர் தர Dolby டிஜிட்டல் இசையானது, ஒட்டுமொத்த தொலைக்காட்சி அனுபவத்துக்கு, புதிய பரிமாணத்தை சேர்ப்பிக்கின்றது.  

இப்புதிய உற்பத்தியின் அறிமுகம் தொடர்பில், சிங்கர் ஸ்ரீ லங்கா குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களின் அனுபவங்களை மேம்படுத்துவதற்கு மிகச் சிறந்த தொழில்நுட்பத்தை எப்போதும் அறிமுகப்படுத்தி வருவதால், ஒரு நிறுவனம் என்ற வகையில், சிங்கர் பெருமை கொள்கின்றது. புதிய சிங்கர் Epic 4K Smart தொலைக்காட்சி உற்பத்தி வரிசையானது, பொழுதுபோக்கு துறையில் மட்டுமல்லாது, கல்வித்துறையில் கூட புதிய அத்தியாயம் ஒன்றைத் தோற்றுவிக்கவுள்ளது. உன்னதமான உற்பத்தியின் பலனாக வாடிக்கையாளர்கள் மகத்தான அனுபவத்தைப் பெற்றுக்கொள்வர்” என்று குறிப்பிட்டார்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .