Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஒக்டோபர் 17 , மு.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அபான்ஸ் நிறுவனம் 2017ஆம் ஆண்டு சிறுவர் தினத்தையொட்டி தென் மாகாணத்தின் அஹூங்கல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹம்பே சிறுவர் பாடசாலையின் மாணவ மாணவிகளின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாடசாலை அப்பியாசக் கொப்பிகளுடன் பல்வேறு பரிசுப் பொருட்களும் வழங்கி சிறுவர் தினத்தை கொண்டாடியிருந்தது.
முதலாம் வகுப்பு முதல், 11ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு, அடுத்த வருடத்துக்குத் தேவையான சகல அப்பியாசக் கொப்பிகள், பாடசாலைக்கான புத்தகப் பைகள், உணவுப் பெட்டிகள், தண்ணீர் போத்தல்கள், கொம்பஸ் பெட்டிகள், பென்சில் பெட்டிகள், எழுது கருவிகள், பென்சில் உள்ளிட்ட சகல பாடசாலை உபகரணங்களை உள்ளடக்கிய பரிசுப் பொதிகள் பாடசாலையின் ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது. ஆரம்ப வகுப்புகளின் மாணவ மாணவிகளுக்கும், 6ஆம் தரம் முதல் 11ஆம் தரம் வரையான மாணவ மாணவிகளுக்கு, மேலதிக செயல்பாடுகளின் மூலம் அவரவர் திறமைகளை வெளிப்படுத்திக்கொள்வதற்கு தேவையான உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
அதேபோல் ஹம்பே பாடசாலை மாணவ மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான மேடை அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களின் திறமை வெளிப்பாட்டின் அடிப்படையில் ஆரம்ப வகுப்பு முதல் சிரேஷ்ட வகுப்பு வரையான மாணவ மாணவிகளுக்கு வெவ்வேறு வயதெல்லைகளின் அடிப்படையில் கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், ஓவியப் போட்டிகளை உலக சிறுவர் தினம் என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதேபோல் பாடசாலை மாணவ மாணவிகளின் நடனம் மற்றும் நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு இதன் மூலம் சகல மாணவ மாணவிகளும் தனக்குள் மறைந்திருந்த திறமைகளை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தினார்கள்.
கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், சித்திரப் போட்டிகளில் வயதெல்லையின் அடிப்படையில் 2 பகுதிகளாக பிரித்து நடுவர் குழுவொன்றினால் வெற்றியாளர்களை தெரிவுசெய்து வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பெறுமதியான டெப்கள், ரைஸ் குக்கர்கள், டோஸ்டர்கள் உள்ளிட்ட அபான்ஸ் வீட்டுப் பாவனைப் பொருட்கள் பலவற்றை பரிசாக வழங்கியிருந்தது. அதுமட்டுமல்லாது இந்த மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை உன்னதமாக்கும் நோக்கில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் விசேட பரிசுப் பொதிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் இப்பாடசாலை மாணவ மாணவிகளுக்கு விசேட காலை உணவுப் பொதிகளையும் அபான்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago