2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

சில பொருட்களின் இறக்குமதிக்கு அனுமதி

S.Sekar   / 2022 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிர்மாணத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தமது நிர்மாணத் திட்டங்களில் பயன்படுத்துவதற்காக தரை ஓடுகள் (டைல்கள்) இறக்குமதிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

தரைஓடுகள் மற்றும் கற்கள் (HS குறியீடுகள் 25.16, 25.16, 68.02, 68.10) ஆகியன நிர்மாணத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் சொந்தத் திட்டங்களில் பயன்படுத்தும் நோக்கத்திற்காக மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அவற்றை மீள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் முதலீட்டு சபையின் கீழ் வராத அனுமதி பெற்ற தொடர்மனைகள், கலப்பு அபிவிருத்தித் திட்டங்கள், அனுமதி பெற்ற ஹோட்டல்கள் மற்றும் அரசாங்கத் திட்டங்கள் போன்றவற்றுக்கு இந்த இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் நிதியளிப்பில் முன்னெடுக்கப்பட்டும் திட்டங்களுக்கான நிர்மாணத்துறை பயன்பாட்டு வாகனங்கள் இறக்குமதிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மின்சார சைக்கிள்கள் இறக்குமதிக்கும் ஜனாதிபதியினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .