Freelancer / 2023 டிசெம்பர் 11 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலைக்கு மருத்துவ சாதனங்களை இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி கையளித்திருந்தார். இந்த கையளிப்பு நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர் கலாநிதி. ரமேஷ் பத்திரன மற்றும் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் கலாநிதி. சீதா அரம்பேபொல ஆகியோர் கலந்து கொண்டனர். இரு நாடுகளுக்குமிடையிலான ஆழமான பந்தத்தை உறுதி செய்யும் வகையிலும், இலங்கையின் சுகாதார பராமரிப்பு உட்கட்டமைப்பை உறுதி செய்யும் வகையிலும் இந்த அன்பளிப்பு அமைந்திருந்தது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலைக்கு அத்தியாவசியமான வைத்திய உபகரணங்களை கையளிக்கப்பட்டிருந்தது. அதனூடாக வைத்தியசாலையினால் தரமான சுகாதார பராமரிப்பு சேவைகளை பெற்றுக்கொடுக்கும் ஆற்றல் மேம்படுத்தப்பட்டிருந்தது. இவ்வாறு அன்பளிப்பு செய்யப்பட்ட சாதனங்களில் மயக்கமருந்தளிக்கும் பகுதி, தன்னியக்கமயப்படுத்தப்பட்ட ரிபரக்டோமீற்றர், மூன்று தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், மீட்டல் படுக்கை, மூன்று Slit விளக்குகள், ஐந்து படுக்கை அருகில் பேணப்படும் கண்காணிப்பான்கள் மற்றும் ஒரு சத்திர சிகிச்சை சாதன தொகுதி போன்றன அடங்கியிருந்தன. இலங்கையின் சுகாதார பராமரிப்பு வசதிகளை மேம்படுத்துவதில் ஜப்பான் வழங்கும் ஆதரவுக்கான அர்ப்பணிப்பின் அங்கமாக இந்த பங்களிப்புகள் அமைந்துள்ளன.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி தெரிவிக்கையில், “முதல் தொகுதி சாதனங்களை இன்று கையளிப்பு செய்வதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அதனூடாக இலங்கையில் சுகாதார பராமரிப்பை மேம்படுத்துவதற்கான எமது அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார பராமரிப்பு துறையில் ஜப்பான் மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையிலான ஒன்றிணைந்த செயற்பாட்டை இந்த இணைந்த செயற்பாடு உறுதி செய்வதாக அமைந்திருப்பதுடன், நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதாகவும் உள்ளது.
பாரிய நன்கொடை வழங்கும் திட்டத்தின் ஆரம்பமாக இந்த கையளிப்பு அமைந்துள்ளது. எமது அர்ப்பணிப்பின் பிரகாரம், எதிர்காலத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் மேலும் மருத்துவ சாதனங்கள் நிறுவப்படும். இலங்கையின் சுகாதார பராமரிப்பு வசதிகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதில் ஜப்பான் காண்பிக்கும் அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் இந்த பங்காண்மை அமைந்துள்ளது.
12 minute ago
21 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
33 minute ago