Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஜூலை 18 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5, 2024 அன்று Coca-Cola அறக்கட்டளை மற்றும் World Vision Lanka நிறுவனம் ஆகியவை, கொழும்பில் உள்ள உலக வர்த்தகமையத்தில் மூன்று புதிய Drop-in பிளாஸ்டிக் சேகரிப்பு வசதிகளை நிறுவின.
ASPIRE திட்டத்தின் கீழ், இந்த நிகழ்வில் உலக வர்த்தகமையத்தின் முன்னால் திறப்பு விழாவும், PET பிளாஸ்டிக் போத்தல்களை தனியாக பிரித்தெடுத்து மீள் சுழற்சி செய்வதின் அவசியம் குறித்து சேகரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அறிவை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட தகவல் விழிப்புணர்வு அமர்வுகளும் இடம்பெற்றன.
மேலும், வீட்டில் இருந்து PET பிளாஸ்டிக் போத்தல்களை கொண்டுவருமாறு அனைவரையும் ஊக்குவித்தன. இந்த ஒத்துழைப்பு, உலக வர்த்தகமையத்தில் சேகரிக்கப்படும் அனைத்து PET கழிவுகளும் முறையாக தனியே பிரிக்கப்பட்டு மீள் சுழற்சி செய்யப்படுவதை உறுதி செய்கிறது. உலக வர்த்தகமையத்தில் மூலோபாய முறையில் அமைக்கப்பட்டுள்ள 30 சேகரிப்பு நிலையங்கள் மூலம் PET சேகரிப்பை அதிகரிப்பதே ASPIRE திட்டத்தின் நோக்கமாகும். இந்த முயற்சி சமூகங்களை ஊக்கு விப்பதோடு, நிலையான கழிவு நிர்வகிப்பதையும் மேம்படுத்தி, திட்டத்தின் ஒட்டுமொத்த இலக்குகளை அடைய உதவுகிறது.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago