2025 ஜூலை 19, சனிக்கிழமை

சுற்றுலா, விருந்தோம்பல் துறை தொடர்பில் ஒரு நாள் செயலமர்வு

Editorial   / 2018 நவம்பர் 06 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எல். அதிரன்

இலங்கை அரசாங்கமும் அவுஸ்திரேலிய அரசாங்கமும் இணைந்து, திறன் அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தும் உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் அபிவிருத்தி திட்டம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஒரு நாள் செயலமர்வு மட்டக்களப்பு ஹிரி போஜன் ஹோட்டலில் கடந்த வாரம் இடம்பெற்றது.  

உணர்ச்சி நுண்ணறிவு மற்றும் வாழ்க்கைத் திறன் பயிற்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரசாத் ஜெயசிங்க தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கின் போது வளவாளராக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சுற்றுலா முகாமைத்துவ பீட பேராசிரியர் எம்.எஸ்.எம் அஸ்லம் கலந்து கொண்டு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் உள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பாக விளக்கமளித்தார்.  

இதன் ஆரம்ப நிகழ்வில், நுண்ணறிவு மற்றும் வாழக்கைத்திறன் அபிவிருத்தி நிறுவனத்தின் முகாமைததுவப் பணிப்பாளர் பிரசாத் ஜயசிங்க, திட்ட இணைப்பாளர் சாமிர் சாலிஹ், உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் திட்ட முகாமையாளர் தங்கவேல் சக்திவேல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.  

கிழக்கு மாகாணத்தின், முக்கியமாக மட்டக்களப்பின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக ஊடகவியலாளர்களின் பங்களிப்புக்கள் இலங்கையில் உள்ள சுற்றுலா பிரதேசங்களின் சாதக பாதக கருத்துக்கள் அதன் முன்னேற்றங்கள் சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் மத்தியில் விழிப்பூட்டப்பட்டது. அத்துடன், இது தொடர்பான இன்னோரன்ன விடயங்களும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமானது மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, பொலநறுவை மாவட்டங்களைச் சேர்ந்த வறிய நிலையிலுள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் வலது குறைந்தோரை தொழிலாளர்களாக, உற்பத்தியாளர்களாக, மற்றும் முயற்சியாண்மை யாளர்களாக சுற்றுலாத்துறையில் உள்வாங்குவதை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படுகிறது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X