2024 மே 04, சனிக்கிழமை

செலான் கிரடிட் கார்ட்ஸ் இலகுக் கொடுப்பனவுத் திட்டங்கள் அறிமுகம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 02 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் கார்ட்ஸ், அனைத்து பாடசாலைக் கட்டணக் கொடுப்பனவுகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட புத்தகசாலைக் கொள்வனவுகளுக்கு 3 மாத 0% வட்டிவீதத்தில் இலகுக் கொடுப்பனவுத் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய சலுகையுடன், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் பொருளாதாரச் சுமையை தளர்த்துவதற்கு செலான் கார்ட்ஸ் முயற்சிப்பதோடு, ஒவ்வொரு பிள்ளையும் தரமான கல்வியைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்கிறது. இந்த 0% வட்டிவீத இலகுக் கொடுப்பனவுத் திட்டங்கள், தமது செலவுகளை குடும்பங்கள் சிறப்பாகக் கையாளுவதற்கு ஊக்குவிக்கும் அதேவேளை மாணவர்களின் கல்விசார் வெற்றிகளுக்கு அவசியமான கருவிகளைப் பெற்றுத்தரும் விதமாக  வடிவமைக்கப்பட்டுள்ளன.

செலான் வங்கியின் வாடிக்கையாளர் வங்கிச்சேவை பிரதி பொது முகாமையாளர் யூஜின்  செனவிரத்ன குறிப்பிடும்போது, 'எதனையும் முற்றிலும் மாற்றியமைக்கும் கல்வியின் ஆற்றல் மற்றும் பிள்ளையொன்றின் எதிர்காலத்தை உருவாக்குவதில் அதன் இன்றியமையாத தாக்கத்தின் மீது செலான் கார்ட்ஸ் மனப்பூர்வமான நம்பிக்கை கொண்டுள்ளது. வெறுமனே ஒரு நிதித்தீர்வாக மட்டுமன்றி, ஒவ்வொரு பிள்ளையின்; கனவுகளுக்குமான எமது மெய்யான அர்ப்பணிப்பின் ஓர் உருவகமாக இந்த 0% வட்டி இலகுக் கொடுப்பனவுத் திட்டங்களை அறிமுகம் செய்வதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்' என்று தெரிவித்தார்.

கொள்வனவுகளை இலகுக் கொடுப்பனவுத் திட்டமாக மாற்றிக்கொள்ள, கார்ட் உரிமையாளர்கள் வங்கியுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

செலான் கார்ட்ஸின் இலகு கொடுப்பனவுத் திட்டங்களில் உள்ளுர் அரசாங்கப் பாடசாலைகள், தனியார் பாடசாலைகள், மற்றும் சர்வதேசப் பாடசாலைகள் உட்பட பரந்த அளவிலான கல்வி நிறுவகங்கள் உள்ளடங்குகின்றன. அதற்கு மேலதிகமாக இத்திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்ட புத்தகசாலைகளின் கொள்வனவுகளுக்கும் நீட்டிக்கப்பட்டிருப்பதால், மாணவர்கள் அத்தியாவசிய கல்விசார் உபகரணங்களை சௌகரியமாக பெற்றுக்கொள்ள முடியும்.  

ஒரு பிள்ளையின் மெய்யான சாத்தியங்களை திறந்து வைப்பதற்கு உறுதி பூண்டுள்ள ஒரு வர்த்தகநாமம் என்ற வகையில், வாடிக்கையாளர்களின் மனம் விரும்பும் அவசியத் தேவைகளுக்கு தன்னிகரற்ற சேவைகளை வழங்குவதில் செலான் கார்ட்ஸ் என்றும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. இந்த இலகுக் கொடுப்பனவுத் திட்டங்களை வழங்குவதன் ஊடாக, இளையோரை ஊக்குவித்து சவால்களுக்கு மத்தியிலும் அவர்களது கல்விப் பயணத்திற்கு துணை நிற்கும் தனது நிலைப்பாட்டை செலான் கார்ட்ஸ் மீளுறுதி செய்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .