2025 மே 20, செவ்வாய்க்கிழமை

செலான் டிக்கிரியின் கௌரவிப்பு

Editorial   / 2018 நவம்பர் 28 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர் சேமிப்புக் கணக்கான செலான் டிக்கிரி, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு 100,000 ரூாய் பணப்பரிசை வழங்கி கௌரவித்திருந்தது.   

மினுவங்கொட, ரெஜி ரணதுங்க பாலர் பாடசாலையில் பயிலும் எச். ஏ. செனுஜி அகித்மா ஹெட்டியாரச்சி, சாவகச்சேரி இந்து பாலர் பாடசாலையின் நவஸ்கன் நதி ஆகியோர் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டதை முன்னிட்டு, 100,000 ரூபாய் தொகையை பெற்றுக் கொண்டனர். செலான் வங்கியில் இவர்கள் பேணும் வைப்புக்காக, பெருமளவு டிக்கிரி அன்பளிப்புகளுக்கு மேலதிகமாக இந்த அன்பளிப்பையும் பெற்றுக் கொண்டனர்.  

செலான் வங்கியின் சந்தைப்படுத்தல், விற்பனை பிரிவின் தலைமை அதிகாரி காமிக டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், 

“உலகை மாற்றுவதற்கு சிறுவர்கள் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த சாதனமாக கல்வி அமைந்துள்ளது. பிரத்தியேக அபிவிருத்திக்கு கல்வி உதவுவதுடன், சமூக மட்டத்திலும் பொருளாதார ரீதியிலும் உயர்ந்த நிலையை எய்துவதற்கு, கல்வி அவர்களுக்கு உதவியாக அமைந்திருக்கும். 

“தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பதிவுச் செய்யும் மாணவர்களுக்கு, நாம் விறுவிறுப்பான பரிசுகளை வழங்கி வருவதுடன், அவர்களை மேலும் கல்வி கற்க ஊக்குவிப்பதுடன், அதிகளவு சமூகப்பெறுமதி வாய்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தூண்டுகிறோம். 

“சிறுவர்களின் சிறந்த செயற்பாடுகளை கௌரவிப்பதனூடாக, அவர்களின் எதிர்பார்ப்புகளை தூண்ட முடியும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், அன்புடன் அரவணைக்கும் வங்கி எனும் வகையில், அவர்களின் எதிர்பார்ப்புகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் தேசத்துக்கு பெறுமதி வாய்ந்த பிரஜைகளாக உருவாக்குவதற்கும் நாம் உதவிகளை வழங்குகிறோம்” என்றார்.  

மாணவர்கள், பெற்றோர்களுடன் தொடர்ச்சியாக செலான் வங்கி தொடர்புகளைப் பேணி வருவதுடன், வங்கியின் தரம் 5 புலமைப்பரிசில் கருத்தரங்குகள் இதற்கு அடித்தளமாக அமைந்துள்ளன. 

மேலும் ‘செலான் பஹசர’ எனும் வங்கியின் நாடளாவிய சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கையினூடாக பின்தங்கிய நிலையில் காணப்படும் மாணவர்களுக்கு டிஜிட்டல் மற்றும் நவீன கல்வி சாதனங்களை அணுகுவதற்கு பின்புலம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X