Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2022 ஓகஸ்ட் 26 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கியினால், அதிகரித்துச் செல்லும் உணவு நெருக்கடியான சூழலுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையில், தமது ஊழியர்கள் மத்தியில் அத்தியாவசிய மரக்கறி மற்றும் பழவகைகளை தமது வீடுகளில் பயிரிடுவதற்கான ஊக்குவிப்பு வழங்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம், செலான் வங்கி நலன்புரிச் சங்கம், விவசாயத் திணைக்களத்துடன் கைகோர்த்து, தமது ஊழியர்கள் மத்தியில் தாவர விதைகளை இலவசமாக விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்தத் திட்டத்துக்கு தூய மனதுடன் நாம் வளர்ப்போம் (Suhada Hadin Apith Wawamu) என பெயரிடப்பட்டிருந்தது. ஊழியர்களுக்கு தமது வீடுகளில் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்திருந்ததுடன், நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடியான சூழலுக்கு முகங்கொடுக்க அவர்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் அமைந்திருந்தது. தெரிவு செய்யப்பட்ட தாவர விதைகளை விவசாயத் திணைக்களம் பரிந்துரைத்திருந்ததுடன், தமது வீடுகளில் காணப்படும் மட்டுப்படுத்தப்பட்ட இடப் பகுதிகளில் அவற்றை பயிரிட்டு, தினசரி மரக்கறி நுகர்வுக்கு அவசியமான குறுகிய கால விளைச்சலை வழங்கும் வகையில் அவை அமைந்திருந்தன.
செலான் வங்கியின் மனித வளங்கள் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் ஜயந்த அமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில், செலான் வங்கியைச் சேர்ந்த எமது வாடிக்கையாளர்களுக்கு எளிமையான தீர்வுகளை வழங்குவதுடன், எமது அணி அங்கத்தவர்களின் வாழ்க்கையை எவ்வாறு வளமூட்டுவது என்பது தொடர்பிலும் கவனம் செலுத்துகின்றோம். குறிப்பாக, இது போன்ற நெருக்கடியான காலப்பகுதியில், அனைவரின் வாழ்க்கையிலும் பெறுமதி சேர்க்கும் செயற்திட்டங்களை முன்னெடுப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். எமது ஊழியர்கள் மத்தியில் பகிர்ந்தளித்திருந்த இந்த தாவர விதைகளை பெற்றுக் கொள்வதற்காக விவசாயத் திணைக்களத்துடன் நாம் கைகோர்த்திருந்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். அவர்கள் வழங்கியிருந்த பெறுமதி வாய்ந்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கின்றோம். செலான் தலைமையகத்தில் நாம் இதனை ஆரம்பித்திருந்ததுடன், சகல கிளைகளிலும் விஸ்தரிப்பதற்கு நாம் எதிர்பார்ப்பதுடன், நிறுவனத்தின் வெவ்வேறு மட்டங்களினூடாக எமது ஊழியர்களுக்கு வலுச் சேர்க்கவும் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
வெளியக பங்காளர்கள் மாத்திரமன்றி, தமது உள்ளக பங்காளர்களை வலுவூட்டுவதற்கான அர்ப்பணிப்பையும் செலான் வங்கி உறுதி செய்திருந்தது. தொடர்ச்சியாக தனது சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டங்களினூடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
25 minute ago
30 minute ago
34 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
30 minute ago
34 minute ago
48 minute ago