2024 மே 02, வியாழக்கிழமை

செலான் வங்கி காலியில் வணிக சமூகத்திற்கு வழிகாட்டல்கள்

Freelancer   / 2023 ஜூலை 24 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி, சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு (SMEs) ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை வளமானதாக்கி முன்கொண்டு செல்லுதல் ஆகிய நோக்கங்களோடு அண்மையில் தென் மாகாணத்தைச் சேர்ந்த வணிக சமூகத்துக்கு தெளிவுபடுத்தல் நிகழ்வொன்றை ஒழுங்கு செய்திருந்தது. இந்நிகழ்வு காலியில் உள்ள ஆராதனா ஹோட்டலில் நடைபெற்றதோடு, 100க்கு மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு செலான் வங்கி அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளின் நன்மைகளைப் பெற்றுக்கொண்டனர்.

உள்நாட்டு வணிகங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இந்நிகழ்வானது வணிகத்தின் வெற்றிக்கு அத்தியாவசியமான பல்வேறு முக்கியத் தலைப்புகளை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. பங்கேற்பாளர்கள் நிதிசார் முகாமைத்துவம் குறித்த பெறுமதியான விடயங்களை அறிந்து கொண்டதோடு, வணிக நடவடிக்கைகளை நீடித்தல் மற்றும் நிலைபேறான வளர்ச்சியை உறுதிப்படுத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் கண்டுகொண்டனர். அத்துடன் இந்த உரையாடல்கள் உற்பத்திகளை சந்தைப்படுத்துதல், வர்த்தகநாமங்களைக் கட்டியெழுப்பல் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு சமூக வலைதளங்களை எவ்வாறு ஊடகமாக பயன்படுத்தலாம் என்பன பற்றிய விளக்கங்களையும் வழங்கியது. உள்ளூர் அரச நிர்வாகம் மற்றும் அரச முகவர் தரப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அதிகாரிகளும் தமது நுணுக்கமான விடயங்களை பங்கேற்பாளர்களிடம் பகிர்ந்துகொண்டனர். இவர்களில் போப்பே போத்தல பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் பியுமாலி லியனகே மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பிரதிப் பணிப்பாளர் முத்துஹெட்டி கமகே பந்துல ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர். காலி மாவட்ட வர்த்தக சம்மேளனம் சார்பாக பிரதம நிறைவேற்று அதிகாரி சாலிய ரொஷான் புஷ்பகுமார மற்றும் செயற்திட்ட முகாமையாளர் கபில சந்தன ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

மீள்நிதிச்சேவை கடன் திட்டங்கள் மற்றும் அவற்றின் வழங்குகை பற்றி வலியுறுத்தப்பட்டமை இந்நிகழ்வின் முக்கிய தருணங்களில் ஒன்றாகும்.  நிதிரீதியான இயலுமைகளைப் பலப்படுத்துதல் மற்றும் அவர்களது விரிவாக்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் என்பவற்றுக்கு மீள்நிதிச்சேவை கடன்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது பற்றிய விரிவான தகவல்கள் பங்கேற்பாளர்களுக்கு இதன்போது வழங்கப்பட்டன. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் சிறிய நடுத்தர வணிகங்களின் முக்கியத்துவத்தை செலான் வங்கி அங்கீகரிப்பதோடு, அவர்களது அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கும் எளிய நிதித்தீர்வுகளை பெற்றுத்தர எதிர்பார்க்கிறது.

பல்வேறு வணிக செயன்முறைகளை சீராக்குவதற்கும் எளிதாக்குவதற்கும் கட்டமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் வழிமுறைகளின் இருப்பை செலான் வங்கி காட்சிப்படுத்துவதன் மூலமாக 'டிஜிட்டல் பரிமாணம்' இன்னுமொரு முக்கிய கருப்பொருளாக உருவெடுத்துள்ளது. பங்கேற்பாளர்களுக்கு புத்தாக்கமான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் கருவிகளை அறிமுகப்படுத்தியதோடு, அவற்றின் மூலமாக அவர்களால் புதிய சந்தைகளுக்குள் நுழைய, உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்க மற்றும் வழமையான எல்லைகளுக்கு அப்பால் தமது வாடிக்கையாளர்களை விஸ்தரிக்க முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .