Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 நவம்பர் 22 , பி.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கியின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களாக கிரிஷான் திலகரட்ன, ரவி அபேசூரிய ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒக்டோபர் 1, ஒக்டோபர் 17 ஆகிய தினங்களிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அபேசூரிய சுயாதீன பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், திலகரட்ன நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குவைத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பாரிய நிறுவனங்களில் ஒன்றான (4.7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான சொத்துகளைக் கொண்டது) நஷனல் இன்டஸ்ரீஸ் குரூப் (NIG) இன் உரிமையாண்மையின் கீழ் காணப்படும் கன்டொர் குரூப்பின் குழுமப் பணிப்பாளராக ரவி அபேசூரிய காணப்படுகிறார். முன்னதாக அவர் ஹேலீஸ் குழுமத்தில் மூலோபாய வியாபார அபிவிருத்தித் தலைமை அதிகாரியாகவும் அம்பா ரிசேர்ச் லங்காவின் முகாமைத்துவ பணிப்பாளராகவும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் செயலாற்றியிருந்தார்.
200 மில்லியன் டொலர் PE நிதியத்தின் தனியார் முதலீடுகளைப் பராமரித்துக் கொள்வதற்கு ரவி பொறுப்பாக செயலாற்றியிருந்தார். முன்னர் அவர், கன்டொர் குரூப் ஒஃவ் கம்பனிஸ், அம்பா ரிசேர்ச், ஃபிட்ச் ரேட்டிங் ஆகியவற்றை நிறுவுவதில் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார்.
அதற்கு முன்னதாக, JP மோர்கன் நிறுவனத்தின் கூட்டாண்மை நிதியியல் பிரிவின் தலைமைப் பொறுப்பை வகித்திருந்தார்.
கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமாக கிரிஷான் திலகரட்ன செயலாற்றி வருவதுடன், LOLC பிஎல்சியின் சிரேஷ்ட முகாமைத்துவ அணியின் அங்கத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கம்போடியாவின் Prasac நுண் நிதியியல் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் அங்கம் வகிப்பதுடன், கொமர்ஷல் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் பிரைவட் லிமிட்டெடின் பணிப்பாளர் சபையிலும் அங்கம் வகிக்கிறார்.
இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் பணிப்பாளராகத் திகழ்வதுடன், வங்கிசாரா நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் இலங்கை நிதியியல் இல்லங்களின் சம்மேளனத்தின் தலைவராகவும் இயங்குகிறார்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago