2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

செலான் வங்கியின் ‘Tikiri Save the Moment’ புகைப்பட போட்டி

S.Sekar   / 2022 ஜனவரி 07 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் டிக்கிரி, ‘Tikiri Save the Moment’ புகைப்பட போட்டியை முன்னெடுத்துள்ளது. சிறுவர்கள் மத்தியில் தமது வாழ்க்கையின் சிறந்த தருணங்களை புகைப்படமெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. கடந்த இரு வருட காலமாக, கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக மக்களின் நடமாட்டம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ள நிலையில், பல சிறுவர்களுக்கு புகைப்படக்கலை என்பது மிகவும் நேசிக்கப்படும் அம்சமாக மாறியிருந்தது.

அவர்களை கவரும் தருணங்களை புகைப்படமெடுப்பதனூடாக, அவர்களினுள் காணப்படும் ஆக்கத்திறன் மேம்படுத்தப்பட்டு, அவர்களுக்கு அதிகளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இதனை புரிந்து கொண்டு, செலான் டிக்கிரி, டிக்கிரி கணக்குதாரர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து, முதலாவது டிஜிட்டல் புகைப்பட போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கையில் அதிகளவு நேசிக்கப்படும் சிறுவர் சேமிப்புக் கணக்காக செலான் டிக்கிரி கணக்கு அமைந்துள்ளது. சர்வதேச போக்குகளை பின்பற்றுவது மற்றும் சிறுவர்களுக்கு களத்தை ஏற்படுத்திக் கொடுப்பது போன்றன செலான் டிக்கிரியின் இலக்குகளாக அமைந்துள்ளன. சிறுவர்களுக்கு கல்வியறிவூட்டுவது, ஈடுபாட்டை பேணுவது மற்றும் ஊக்குவிப்பது போன்றவற்றில் பல புத்தாக்கமான வழிமுறைகளை இனங்காணும் நடவடிக்கைகளை வங்கி தொடர்ச்சியாக இனங்கண்ட வண்ணமுள்ளது. இந்தத் திட்டத்தினூடாக, தமது இளம் வாடிக்கையாளர்களை ஊக்குவித்து. தமது இனிய தருணங்களை படமெடுத்து, அவற்றை நினைவாக வைத்திருந்து, தமது குடும்பத்தார் மற்றும் அன்புக்குரியவர்களுடன் மகிழ்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. இந்தப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த பணப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் போன்றன வழங்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட புகைப்படங்கள் 2022 ஆம் ஆண்டின் செலான் வங்கியின் நாட்காட்டியில் பிரசுரிக்கப்பட்டன.

இந்தத் திட்டம் தொடர்பாக செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைகள் பிரிவின் உதவி பொது முகாமையாளர் காமிக டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “சிறுவர் சேமிப்புக் கணக்கை விட எப்போதும் செலான் டிக்கிரி அப்பாற்பட்டதாக அமைந்துள்ளது. முடக்கல்நிலை அமுலிலிருந்த காலப்பகுதியிலும் எமது சிறுவர் கணக்குதாரர்களுடன் பல்வேறு நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டோம். அதிகளவு டிஜிட்டல் பிரசன்னத்துடன் வேகமாக வளர்ந்து வரும் சிறுவர் சேமிப்புக் கணக்காக செலான் டிக்கிரி அமைந்துள்ளது. எமது ரசிகர்களின் ஈடுபாடு, ஆர்வம் மற்றும் கருத்துப் பகிர்வின் பிரகாரம், இந்த ஆண்டில் பல டிஜிட்டல் செயற்திட்டங்களை அறிமுகம் செய்து, எமது சமூக வலைத்தள பிரசன்னத்தை மேம்படுத்தியிருந்தோம். சிறுவர்கள் மத்தியில் புகைப்படக் கலை என்பது வளர்ந்து வருவதுடன், இந்தப் பழக்கத்தை ஊக்குவிக்க செலான் வங்கியைச் சேர்ந்த நாம் தீர்மானித்தோம். அதனூடாக சிறுவர்களுக்கு தமது ஆக்கத்திறனை வெளிப்படுத்துவதற்கு களத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தோம்.” என்றார்.

இந்தப் போட்டி இரு பிரிவுகளை உள்ளடக்கியிருந்தது. பங்குபற்றுநர்களிலிருந்து வெற்றியாளர்கள் தெரிவு இடம்பெற்றதுடன், 'Most Popular Photographs' இல் ஐந்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இந்தப் பிரிவில் செலான் வங்கியின் உத்தியோகபூர்வ சமூக ஊடக கட்டமைப்பில் அதிகளவு  likes, shares மற்றும் responses அடிப்படையில் சந்தனி அலஹகோன், ஹமெத் கெம்சிலு, ஜே.ஹிருஷன், மினுதி விதுன்யா மற்றும் செனுலி நெதும்சா ஆகியோர் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 'Best Photographs' பிரிவில் உள்ளக நடுவர் குழுவினால் ஆதில் வீரக்கொடி, மொஹமட் பயாஸ் ஆதிஃவ், எம். டபிள்யு. பமதி சசென்யா, சமீஹா சஃவாஸ் மற்றும் ரஷித் ஆகியோர் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .