Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 05 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு தேசிய வைத்தியசாலை, திருகோணமலை ஆகிய பகுதிகளில் செலான் வங்கி தமது இரு ATM இயந்திரங்களை நிறுவியுள்ளது.
இந்த இரு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதனூடாக, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்வோருக்கு சௌகரியமான வகையில் 24 மணி நேரமும், 365 நாள்களும் பணத்தை மீளப் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன், திருகோணமலை, அலஸ் தோட்டம், இறை இரக்க திருத்தல வளாகப் பகுதியில் தனது மற்றுமொரு ATM இயந்திரத்தையும் நிறுவியுள்ளது. இதனூடாக இப்பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்குத் தமது கணக்குகளை 24 மணி நேரமும் அணுகி, பணத்தை சௌகரியமாக மீளப் பெற்றுக் கொள்ள முடியும்.
“பணத்தை பெற்றுக் கொள்வதற்கு இலகுவான மாற்று வழியாக ATM இயந்திரங்கள் அமைந்துள்ளன என்பதை அறிவோம். அன்புடன் அரவணைக்கும் வங்கி எனும் வகையில், எமது வலையமைப்பை விஸ்தரிக்க நாம் எதிர்பார்ப்பதுடன், அதனூடாக எமது வாடிக்கையாளர்களுக்குத் தமது வங்கித் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்” என செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் விற்பனைப் பிரிவின் தலைமை அதிகாரி காமிக டி சில்வா தெரிவித்துள்ளார்.
தனது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு, நவீன தொழில்நுட்பம், புத்தாக்கமான தீர்வுகளினூடாக ஒப்பற்ற வங்கியியல் அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் செலான் வங்கி இயங்கி வருகிறது. நாடு முழுவதிலும் 171 கிளைகளை வங்கி கொண்டுள்ளதுடன், முக்கியமான பகுதிகளை உள்வாங்கி 200 க்கும் அதிகமான ATM இயந்திரங்களையும் கொண்டுள்ளது.
31 minute ago
39 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
39 minute ago
42 minute ago