2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

செலான் வங்கியின் ஊக்குவிப்பு திட்ட வெற்றியாளருக்கு iPhone X பரிசு

Editorial   / 2018 மார்ச் 06 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கியின் சமூக மற்றும் டிஜிட்டல் ஊடக செயற்பாடுகளின் அங்கமாக பல நடவடிக்கைகள், விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

வாடிக்கையாளர்களுடன் இணைப்பை ஏற்படுத்தியுள்ள செலான் வங்கி, அவர்களுடன் பல்வேறு ஈடுபாடுகளைப் பேணி வருகிறது.

iPhone போட்டி, டிசெம்பர் 2017இல் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், இதில் பல செலான் வங்கியின் Facebook இரசிகர்கள் பங்கேற்றிருந்தனர். இதிலிருந்து ஓர் அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் புத்தம் புதிய iPhone X ஒன்றை வென்றிருந்தார். புத்தம் புதிய iPhone X ஐ துல்வின் விதாரன சுவீகரித்திருந்தார். செலான் வங்கி முன்னெடுத்திருந்த வெவ்வேறு போட்டிகளினூடாக வழங்கியிருந்த iPhone இன் மூன்றாவது வாடிக்கையாளராக இவர் தெரிவாகியிருந்தார்.   

புத்தாக்கமான தீர்வுகளை வங்கி அறிமுகம் செய்துள்ளதுடன், இவை தொடர்பில் வாடிக்கையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சமூக ஊடக வலைத்தளங்களைப் பயன்படுத்தியிருந்தது. 
Seylan Income Saver மற்றும் Seylan Seylfie Youth சேமிப்பு கணக்குகள் போன்ற சமூக ஊடக வலைத்தளங்களினூடாக பிரசாரப்படுத்தப்பட்டு இருந்ததுடன், அவற்றின் விசேட அம்சங்கள் குறித்தும் விளக்கங்களும் வழங்கப்பட்டிருந்தன.

வங்கியால் அறிமுகம் செய்யப்பட்ட பிந்திய புத்தாக்க அம்சமாக Facebook Messenger Chat Bot அமைந்துள்ளது. இலங்கையின் வங்கியியல் துறையில், முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட Chat Bot ஆக இது அமைந்துள்ளது. 

முழுமையாக தன்னியக்கப்படுத்தப்பட்டுள்ள இந்த Chat bot அடிக்கடி மெருகேற்றம் செய்யப்படுவதுடன், தினசரி வங்கியியல் கோரிக்கைகளுக்கு மூன்று மொழிகளிலும் தீர்வுகளை வழங்குகிறது.  

வாடிக்கையாளர்களை வங்கியின் டிஜிட்டல் வங்கியியல் கட்டமைப்புக்குள் உள்வாங்குவதற்கான மற்றுமொரு டிஜிட்டல் செயன்முறையாக ‘செலான் வங்கியின் இணைய வங்கியியல் வெற்றியாளர் தெரிவுடன் பரிசுகள் மற்றும் வியப்பூட்டும் அம்சங்கள்’ அமைந்துள்ளது. செலான் வங்கியின் இணைய வங்கியியல் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்த ஊக்குவிக்கும் நோக்குடன் இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

வெற்றியாளர்களுக்கு iPhones, tabs மற்றும் மடிக்கணினிகள் போன்றவற்றுடன் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன. பிராந்தியத்தின் ‘சந்தைப்படுத்தலில் சமூக ஊடக வலைத்தளத்தின் சிறந்த பாவனை’ விருதை வங்கி சுவீகரித்திருந்ததுடன், தமது வாடிக்கையாளர்களுக்கு சமூக வலைத்தளங்களினூடாக சௌகரியமான சேவைகளை ஊக்குவித்து வருகிறது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X