2025 ஜூலை 19, சனிக்கிழமை

செலான் வங்கியின் ஒன்லைன் மூலமான EPF கொடுப்பனவு

Editorial   / 2018 டிசெம்பர் 04 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்கள் மற்றும் நிறுவனங்களின் ஊழியர் சேமலாப நிதியக் கொடுப்பனவுகளை (EPF) இலத்திரனியல் முறையில் வங்கியின் கூட்டாண்மை இணைய வங்கியியல் கட்டமைப்பினூடாக செலுத்துவதற்குரிய உடன்படிக்கையில் இலங்கை மத்திய வங்கியுடன் செலான் வங்கி கைச்சாத்திட்டிருந்தது. 

செலான் வங்கியின் ஒன்லைன் கட்டமைப்பைப் பயன்படுத்தி, சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்கள் மற்றும் நிறுவனங்கள் தமது EPF கொடுப்பனவுகளை உடனடியாக சிக்கல்களின்றி மாற்றிக் கொள்ள முடியும்.

மேலும், செலான் இணைய வங்கிச் சேவையூடாக பாவனையாளர்களுக்கு சௌகரியமான முறையில் தமது EPF கொடுப்பனவுகளை 24/7 365 நாட்களும் எப்பகுதியிலிருந்தும் மேற்கொள்ள முடியும்.செலான் வங்கியின் செயற்பாடுகளுக்கான பதில் பொது முகாமையாளர் மலிக் விக்ரமநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “அன்புடன் அரவணைக்கும் வங்கி எனும் வகையில், எமது சகல வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த வங்கியியல் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் நாம் கவனம் செலுத்துகிறோம். சிக்கனமான ஒன்லைன் மூலமான EPF கொடுப்பனவு தீர்வை எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதனூடாக அவர்களை நவீன டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கு வலுவூட்டுவது மட்டுமின்றி, இலங்கையில் காணப்படும் புத்தாக்கமான டிஜிட்டல் வங்கிகளில் ஒன்றாக திகழும் எமது அர்ப்பணிப்பை உறுதி செய்வதாக அமைந்துள்ளது” என்றார்.

சிறிய, நடுத்தளவு தொழில் முயற்சிகள் மற்றும் ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு உதவிகளை பெற்றுக் கொடுப்பதனூடாக நிதியியல் உள்ளடக்கங்கள் மற்றும் டிஜிட்டல் வலுவூட்டல்களை மேற்கொள்வதற்கு செலான் வங்கி பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. இதற்காக பல்வேறு ஊக்குவிப்பு மற்றும் விசேட நிகழ்ச்சிகளை சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கும் இதர வியாபாரங்களுக்கும் முன்னெடுத்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X