2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

ஜோன் கீல்ஸ் திறந்த புத்தாக்க சவாலில் வெற்றியீட்டியோர்

Princiya Dixci   / 2016 நவம்பர் 10 , மு.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜோன் கீல்ஸ் X திறந்த புத்தாக்க சவால் போட்டியின் வெற்றியீட்டியோரில் விவரங்கள் சினமன் கிரான்ட் ஹொட்டலில், அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் வெற்றியீட்டிய அணியாக Jendo தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், இந்த அணிக்கு 2 மில்லியன் ரூபாய் பணப்பரிசு வழங்கப்பட்டிருந்தது. இரண்டாமிடத்தை Markify பெற்றுக்கொண்டது. இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்ட வெற்றியாளருக்கு 1 மில்லியன் ரூபாய் பணப்பரிசு வழங்கப்பட்டிருந்தது 

கீர்த்தி கொடிதுவக்கு, இசுரு ராஜகருண மற்றும் சரித் விதானகே ஆகியோர் இணைந்து நிறுவியிருந்த Jendo இனால், சிரேஷ்ட மருத்துவ பேராசிரியர்களின் மேற்பார்வையின் கீழ் இருதய துடிப்பைக் கண்காணிப்பதற்கு, அவசியமான தொழில்நுட்ப வசதி வழங்கப்படுகிறது. இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்ட Markify இனால், குரல் மூலமாகக் கட்டுப்படுத்தும் SAAS பகுப்பாய்வுக் கட்டமைப்பு செயற்பாடுகள் தரவு உள்ளடங்கலுடன் முன்னெடுக்கப்படுகிறது. சொஹான் தர்மராஜ இந்த நிறுவனத்தின் உரிமையைக் கொண்டுள்ளார். 

2016 ஜுன் மாதம் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தினால், திறந்த புத்தாக்கச் சவால் ஆரம்பிக்கப்பட்டு நான்கு மாதங்களாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. புத்தாக்க சிந்தனையை கொண்டவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் போட்டித்தொடர் அமைந்திருந்ததுடன், சிந்தனை மட்டத்தில் காணப்பட்ட அலங்காரத்தை நடைமுறைச்சாத்தியம் ஆக்குவதற்கு, ஊக்குவிப்பதாயும் அமைந்திருந்தது. இந்தப் போட்டியின் மூலம், ஜோன் கீல்ஸ் X, தனிநபர்கள் மற்றும் அணியினரிடமிருந்து இணையத்தளத்தின்  ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தது. 148 விண்ணப்பதாரிகளிலிருந்து 10 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து திறந்த நாள் நிகழ்வு நடைபெற்றது. இதன் போது அணிகள் போட்டியில் உத்தியோகபூர்வமாக உள்வாங்கப்பட்டிருந்தன. பத்து அணிகளுக்கு தமது ஆக்கத்தை உருவாக்க 60 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.  

புத்தாக்கமான மற்றும் தகர்த்தெறியக்கூடிய எந்தவொரு சிந்தனையையும் ஜோன் கீல்ஸ் X வரவேற்றிருந்தது. தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் ஆகக்குறைந்த நிலைத்திருக்கத்தக்க  தயாரிப்புகள் அல்லது வணிக ரீதியில் அறிமுகம் செய்யப்பட்ட வியாபாரங்களை சமர்ப்பித்திருந்தனர். இவை மேலும் விருத்தி செய்யப்பட்டிருந்தன. சில சிந்தனைகள் ஏற்கனவே காணப்பட்ட மாதிரிகளைப் புதுப்பிக்கும் வகையில் அமைந்திருந்தன.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .