2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஜப்பானில் பணியாற்றுவதற்கு நிர்மாண களத் திறன் பரீட்சை 2023 டிசம்பர் மாதம் ஆரம்பம்

Freelancer   / 2023 டிசெம்பர் 04 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையைச் சேர்ந்த நிர்மாணத்துறைசார் பணியாளர்களுக்கு ஜப்பானில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் 2023 டிசம்பர் மாதம் இலங்கையில் நிர்மாண களத் திறன் பரீட்சை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ஜப்பானிய தூதரகம் அறிவித்துள்ளது. இந்தத் திறன் பரீட்சையுடன், தாதியியல் பராமரிப்பு, உணவு சேவை மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் திறன் பரீட்சை கடந்த ஆண்டு முதல் முன்னெடுக்கப்படுவதுடன், இலங்கையில் தற்போது நான்கு திறன் பரீட்சைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

திறமை படைத்த பல இலங்கையர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஜப்பானில் பணியாற்றுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என ஜப்பான் எதிர்பார்ப்பதுடன், ஜப்பானின் நிர்மாணத்துறையில் பணியாற்றும் வாய்ப்பை வழங்குவது மாத்திரமன்றி, இலங்கையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கக்கூடிய அபிவிருத்தி பணிகளுக்கும் பயனளிப்பதாக அமைந்திருக்கும். இலங்கையின் அபிவிருத்திக்கு அவசியமான ஆதரவையும் உதவிகளையும் ஜப்பானிய தூதரகம் தொடர்ந்தும் வழங்கி, இலங்கையுடன் நீண்ட காலமாக பேணி வரும் நட்பை மேலும் கட்டியெழுப்பும்.

இந்த பரீட்சைக்கான பதிவுகள் பற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள Prometric இணையத்தளத்தைப் பார்வையிடவும். இந்த பரீட்சைகளை இந்த அமைப்பு முன்னெடுக்கின்றது. பரீட்சைக்கான பதிவுகள் நவம்பர் 29 ஆம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ளது.        


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X