2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜோசப் ஃபிரேசரினால் பிரத்தியேகமான சேவைகள்

S.Sekar   / 2022 ஜூலை 15 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோசப் ஃபிரேசர் ஞாபகார்த்த வைத்தியசாலை, பிரசவத்துக்காக நோயாளர் தங்கியிருக்கும் பகுதியில் குழந்தைப் பிரசவிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதனூடாக வீடுகளில் பிரசவம் இடம்பெறுவதைப் போன்ற பிரத்தியேக அனுபவத்தையும், நீரினுள் பிரசவம் போன்ற அனுபவத்தை முதன் முறையாக வழங்கவும் முன்வந்துள்ளது.

அடுத்தாண்டில் நூற்றாண்டு கால பூர்த்தியை கொண்டாடும் ஜோசப் ஃபிரேசர், 2018 ஆம் ஆண்டில், புகழ்பெற்ற வர்த்தகப் பிரமுகரான ஹெரி ஜயவர்தனவின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட சிறந்த 10 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான Melstacorp PLC இன் முழு உரிமையாண்மையில் இயங்கும் துணை நிறுவனமான Melsta Health இனால் கையகப்படுத்தப்பட்டிருந்ததன் பின்னர் பல மேம்படுத்தல்களை எய்தியுள்ளது.

பெண்களுக்கு ஒப்பற்ற பராமரிப்பை பெற்றுக் கொடுக்கும் வகையில் ஜோசப் ஃபிரேசர் வசதிகளைக் கொண்டுள்ளது. இதில் பெண்நோயியல் மற்றும் ஆலோசனை சேவைகள், குழந்தை நலன், பூப்பெய்தல் மற்றும் மாதவிடாய் நிறுத்தம் மற்றும் இதர பல சேவைகளும் அடங்குகின்றன.

வைத்தியசாலை தனது பாரம்பரிய தோற்றத்தையும், அதிகளவு உள்ளக இடவசதிகளையும் பேணி, புனருத்தாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு, புதிய தொழில்நுட்ப வசதிகளையும், உலகத் தரம் வாய்ந்த சுகாதார பராமரிப்பு வசதிகளையும் உள்வாங்கியிருந்தது. மூன்றறை ஏக்கர் காணிப்பகுதியில் இரம்மியமான தோட்டத்துக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த வைத்தியசாலை, இயற்கையுடன் ஒன்றித்ததாக அமைந்துள்ளது.

Melsta Health (Pvt) Ltd இன் வைத்தியசாலைகள் திட்டத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் கே. தியாகராஜா இறைவன் கருத்துத் தெரிவிக்கையில், “ஜோசப் ஃபிரேசரைப் பொறுத்தமட்டில் எமது இலக்கானது, இலங்கையில் பிரத்தியேகமான சுகாதாரப் பராமரிப்பு வசதிகளை வழங்கும் வைத்தியசாலையாக திகழ்வதாகும். அதனூடாக, நாடு முழுவதிலும் வேகமாக விஸ்தரிக்கப்பட்ட வண்ணமுள்ள, சுகாதார பராமரிப்புத் துறையில் Melsta Hospitals மற்றும் Melsta Laboratories ஆகியவற்றுடன் இணைந்து புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முன்வந்துள்ளோம். சகலருக்கும் இலகுவில் சகாயமான முறையில் பெற்றுக் கொள்ளக்கூடிய சிறந்த பராமரிப்பு சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம்.” என்றார்.

பாரம்பரிய பிரசவ அறையில் பிரசவிப்பதற்கு மாறாக, பிரத்தியேக அறையினுள் பிரசவிக்கும் வசதியினூடாக, தாய்மாருக்கு அழுத்தமில்லாத சூழலில், தமது குடும்பத்தாருடன் பிரசவிக்கும் வசதி வழங்கப்படுகின்றது. இந்த வசதி சகாயமான விலையில் அமைந்துள்ளது. இவை உயர்ந்த வசதியைக் கொண்டிருப்பதுடன், பரந்தளவு வசதிகளுடன், பிரத்தியேகமான பெல்கனியைக் கொண்டுள்ளதுடன், அதனூடாக பசுமையான தோட்டப்பகுதியை பார்வையிடும் வசதியினூடாக மனதுக்கு ஆறுதல் சேர்க்கப்படுகின்றது.

கடுமையான மேற்பார்வையின் கீழ், உயர் மருத்துவ நியமங்களைப் பின்பற்றி, பிரித்தானிய மருத்துவமாதுவின் நிபுணத்துவம் வாய்ந்த வழிகாட்டலின் கீழ் பிரசவம் மேற்கொள்ளப்படுகின்றது. இவர் வைத்தியசாலையின் மருத்துவ ஆலோசகராகவும் திகழ்கின்றார். ஊழியர்கள் மற்றும் தாதியர்கள் முறையான பயிற்சிகளைப் பெற்றுள்ளதுடன், முழு பிரசவ செயன்முறையின் போது வழங்கப்பட வேண்டிய உச்ச பராமரிப்பை வழங்குவதை உறுதி செய்கின்றனர். நீரினுள் பிரசவம் அல்லது நீச்சல் தடாக பிரசவம் போன்ற தெரிவையும் மேற்கொள்ளும் வசதி பிரசவத்தை எதிர்பார்ப்போருக்கு வைத்தியசாலை வழங்குகின்றது.

ஜோசப் ஃபிரேசர் பொது முகாமையாளர் ரொஷிற்றா நிறோஷன் கருத்துத் தெரிவிக்கையில், “பிரசவ பராமரிப்பு சேவைகளை வழங்குவதில் முன்னோடியாக அமைந்திருப்பதுடன், இலங்கையில் நோயாளர்களுக்கு பிரசவ அறைகளை சிகிச்சைக்காக வழங்கும் வசதியை அறிமுகம் செய்த முதல் வைத்தியசாலையாக அமைந்துள்ளது. இவை சகாயமான விலையில் அமைந்துள்ளன. சவால்கள் நிறைந்த காலப்பகுதியிலும் தொடர்ச்சியாக சேவைகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் நாம் தொடர்ந்து இயங்குவதுடன், பாரம்பரியத்துக்கு அப்பால் சென்று சேவைகளைப் பெற்றுக் கொடுக்கின்றோம்.” என்றார்.

1923 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, ஜோசப் ஃபிரேசர் ஞாபகார்த்த வைத்தியசாலை இலங்கையில் நீண்ட காலமாக இயங்கும் சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்கும் வைத்தியசாலையாக அமைந்துள்ளது. பழங்கால வடிவமைப்பு, பசுமையான தோட்டம், திறந்த வெளி உணவகம் மற்றும் இயற்கை ஒளியூட்டல் மற்றும் ஒலியமைப்பு போன்றன சிறந்த அனுபவத்தை வழங்குவதாக அமைந்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .