Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடல் வளங்களை நிலைபேறான முறையில் பயன்படுத்தல் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ப்ளு ரிசோர்சஸ் ட்ரஸ்ட், டோக்கியோ சீமெந்து நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
இதன் மூலம், கடல்சார் வளங்களை பாதுகாப்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதில் முக்கிய பங்களிப்பை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு சமூகங்கள் மத்தியில் கல்விசார் நிகழ்ச்சிகள், விழிப்புணர்வைக் கட்டியெழுப்புதல் மற்றும் சிறந்தப் பங்காண்மைகளை ஊக்குவித்தல் போன்றன முன்னெடுக்கப்படவுள்ளன. மூன்றுவருட காலப்பகுதிக்கு பல மில்லியன் ரூபாய் முதலீட்டில் டோக்கியோ சீமெந்து முன்னெடுத்து வரும் பவளப்பாறைகளை மீளவளர்க்கும் செயற்பாடுகளுக்கு ப்ளு ரிசோர்சஸ் ஆய்வு நிபுணத்துவம் பங்களிப்புகளை வழங்கும்.
இலங்கையின் கிழக்கு கரையோரப்பகுதியில் டோக்கியோ சீமெந்து முன்னெடுத்து வரும் கடல் பவளப்பாறைகள் புனருத்தாரண செயற்பாடுகளுக்கு இந்தப் பங்காண்மையின் ஊடாக பிரதான பங்களிப்புகள் வழங்கப்படவுள்ளன. கடந்த சில வருடங்களில், டோக்கியோ சீமெந்து நிறுவனம், நாடு முழுவதிலும் காணப்படும் இயற்கை பவளப்பாறைகளை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
இந்த செயற்பாடுகளுக்கான வளங்களை வழங்குவதில் நிறுவனம் முன்னோடியாக திகழ்வதுடன், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் செயற்பாடுகளுக்கு துறைசார்ந்த அமைப்புகளின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதில் முன்னணியில் திகழ்கிறது. இதற்கமைய, இதுவரையில் டோக்கியோ சீமெந்து நிறுவனம், வன ஜீவராசிகள் பாதுகாப்பு நிதியம், கடற்படை மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றுடன் பங்காண்மைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு வௌவேறு பிரிவுகளில் நிபுணத்துவத்தைப் பெற்றுக் கொள்வதுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ப்ளு ரிசோர்சஸ் ட்ரஸ்ட் இணை ஸ்தாபகர் டானியல் பெர்னான்டோ இந்த உடன்படிக்கைக் கைச்சாத்திடும் நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையில், 'டோக்கியோ சீமெந்து நிறுவனத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளதன் மூலம், இலங்கையின் பவளப் பாறைகளைப் பாதுகாப்பது தொடர்பில் ஆய்வு மற்றும் காப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அபிவிருத்தித்திட்டங்கள் துரித கதியில் முன்னெடுக்கப்படும் போது, இலகுவில் அழியக்கூடிய ஆபத்தை எதிர்கொண்டுள்ள இந்த சூழல்கள் குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை.ஆனாலும், பவளப்பாறைகள் எமது சூழல் சமநிலையில் முக்கிய பங்கை வகிப்பதுடன், கரையோர மற்றும் கடல் வளங்களைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. இப் பங்காண்மையின் மூலமாக, துறையுடன் விஞ்ஞான ரீதியான பாதுகாப்பை ஒன்றிணைப்பதுடன், பவளப்பாறைகளைப் பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும்' என்றார்.
இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடலின் மூலமாக, டோக்கியோ சீமெந்தின் பவளப்பாறைகள் மீளமைப்பு செயற்றிட்டம் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லப்படும். சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கடல்கீழ் ஆய்வு முறைகளை மற்றும் பவளப்பாறைகளின் வளர்ச்சியைக் கண்காணிக்கும் நுட்ப முறைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள ப்ளு ரிசோர்சஸ் தமது நிபுணத்துவத்தை வழங்கவுள்ளது.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago