S.Sekar / 2021 மார்ச் 26 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியினால் உழவர் தோழன் சேவையின் வாடிக்கையாளர்களுக்கு ‘உழவர் தோழன் நிதானய போட்டியை முன்னெடுத்து, அதிக பரிசில்களை வழங்கியது.

நகர்ப்புற மற்றும் கிராமப்புற விவசாய சமூகங்களுக்கு பெரும் பரிசுகளை வழங்கி, ஆண்டு முழுவதும் நடைபெறும் ‘‘உழவர் தோழன் நிதானய போட்டி, அவர்களின் பொருளாதாரங்களையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதலாவது கட்டத்தில் 35 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு தங்கக்காசுகளுடன் விவசாய திணைக்களத்தினால் நடாத்தப்படும் பயிற்சி நெறிக்கு அனுமதியும் பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன், இரண்டாமிடம் பெற்ற 24 வெற்றியாளர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. நடைபெற்றுவரும் இரண்டாம் கட்டத்திலும் இதே போன்று 30 லட்சம் ரூபாய் பெறுமதியான பரிசில்கள் பகிர்ந்தளிக்கப்படும். இவற்றில் மாபெரும் பரிசான Honda Dio உந்துருளி மற்றும் 35 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு விவசாய திணைக்களம் நடாத்தும் பயிற்சிநெறிக்கான அனுமதி அத்துடன் இரண்டாமிடம் பெரும் 60 பேருக்கு கையடக்க தொலைபேசி ஆகிய பரிசில்கள் அடங்கும். முதலாம் மற்றும் இரண்டாம் கட்டம் இரண்டிலும் 10,000 வெற்றியாளர்களுக்கு ரூ.500 பெறுமதியான ரீலோட் ஆறுதல் பரிசாக வழங்கப்படும்.
இலங்கையின் முன்னணி மொபைல் விவசாய தகவல் சேவையான 'உழவர் தோழன்' நாடு முழுவதும் உள்ள 600,000ற்கும் மேற்பட்ட பதிவு செய்ப்பட்ட பயனாளர்களுக்கு பயிர் பாதுகாப்பு மற்றும் அறுவடையை அதிகரிக்க உதவுகிறது. விவசாய திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் 'உழவர் தோழன்- குரல்' சேவையானது நாட்டிலுள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்களுக்கு துறை சார்ந்த நிபுணர்களின் நேரடி வழிகாட்டல் கிடைக்குமாறு வழி செய்துள்ளது. ஒரு சாதாரண கையடக்க தொலைபேசி உள்ள எவருக்கும் அணுகக்கூடிய இச்சேவையானது 25 பயிர் குழுக்கள் மற்றும் வீட்டு தோட்டம் ஆகியவற்றுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
உழவர் தோழன்- குரல் சேவையினை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து நாளொன்றுக்கு ரூ.1 (மற்றும் வரி) மற்றும் உழவர் தோழன்- அலைபேசி செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து நாளொன்றுக்கு ரூ.2 (மற்றும் வரி) கட்டணமாக அறவிடப்படுகின்றது. மற்றும் மொபைல் App ற்கான அனைத்து பயிர்களுக்கும் வரையறையற்ற அணுகலுக்காக ஒரு நாளைக்கு ரூ .2 (மற்றும் வரி) அறவிடப்படுவதுடன், டயலொக் மொபைல் வாடிக்கையாளர்கள் எவ்விதமான டேட்டா கட்டணங்களும் இன்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். உழவர் தோழன்- App ஐ Google Play Store வழியாக நேரடியாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் அத்துடன் குரல் சேவையை 616ற்கு அழைப்பதன் மூலம் அணுக முடியும்.
7 minute ago
10 minute ago
20 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
20 minute ago
22 minute ago