Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி, தனது வருடாந்த சீமெந்து விநியோகஸ்தர் மாநாட்டை, அண்மையில் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் முன்னெடுத்திருந்தது.
இதன்போது, சிறப்பாகச் செயலாற்றியிருந்த விநியோகிஸ்தர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர். யாழ்ப்பாணம், ‘சிற்றி ஹார்ட்வெயார் அன்ட் ஸ் ரோர்ஸ்’ சிறந்த விநியோகஸ்தருக்கான விருதை வென்றிருந்ததுடன், மட்டக்களப்பு, ‘ஆஞ்சனேயர் சீமெந்து அன்ட் ஹார்ட்வெயார் டீலர்ஸ்’ இரண்டாமிடத்தையும் மட்டக்களப்பு, ‘அஹிலா ஹார்ட்வெயார்’ மூன்றாமிடத்தையும் பெற்றிருந்தன.
நாடு முழுவதையும் சேர்ந்த 300க்கும் அதிகமான, சிறப்பாகச் செயலாற்றியிருந்த டோக்கியோ சீமெந்து விநியோகிஸ்தர்கள், கடந்த ஆண்டில் வெளிப்படுத்தியிருந்த சிறந்த பெறுபேறுகளுக்காக கௌரவிக்கப்பட்டிருந்தனர். இதில் 16 சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்தவர்களும் 175க்கும் அதிகமான வெற்றியாளர்களும் வெவ்வேறு பிரிவுகளில் பரிசுகளைப் பெற்றிருந்தனர்.
நிறுவனத்தால் எய்தப்பட்டிருந்த சில சாதனைகள் குறித்து டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் கருத்துத் தெரிவிக்கையில், “எமது விநியோகஸ்தர் வலையமைப்புடன் நாம் பேணி வரும் உறவு என்பது நம்பிக்கை, பரஸ்பர மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. டோக்கியோ சீமெந்து, பல சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு, சந்தையில் முன்னோடியாகத் திகழ்கிறது. நுகர்வோரால் அல்லது பாரிய திட்டமொன்றால் எமது எந்தவொரு சீமெந்து, கொங்கிறீற் கலவை அல்லது பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்பை கொள்வனவு செய்யும் போதும், இந்த உறவு மேலும் உறுதி செய்யப்படுகிறது. நாம் மேலும் சிறப்பாகச் செயலாற்றுவதற்கு தூண்டப்படுகிறோம். விநியோகஸ்தர் ஒன்றுகூடல் மாநாடு என்பது, அவர்கள் அனைவருக்கும் நம்பிக்கையூட்டி, ஊக்கமளிக்கும் வைபவமாக அமைந்துள்ளது” என்றார்.
இந்த நிகழ்வில், நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், நிர்வாகம், சந்தைப்படுத்தல், விற்பனை அணிகளின் அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
“எமது விநியோகஸ்தர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவர்களின் பங்களிப்பினூடாக எமது வளர்ச்சி மேம்படுத்தப்படுகிறது. எமது சந்தைப்படுத்தல் சூழலில் காணப்படும் சவால்களை, வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கும், எமது வாடிக்கையாளர்களுக்கு மேலதிக பெறுமதியை சேர்ப்பதற்கும் அவர்களின் ஒப்பற்ற அர்ப்பணிப்பு எமக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. அவர்களின் பங்களிப்பை நாம் கௌரவிப்பதுடன், வெற்றிகரமாக வியாபாரங்களை இயக்குவதற்கு எமது தொடர்ச்சியான வாக்குறுதியை வழங்குகிறோம்” என டோக்கியோ சீமெந்து குழுமத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் தஷந்த உடவத்த தெரிவித்தார்.
10 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
58 minute ago
1 hours ago