2025 ஜூலை 30, புதன்கிழமை

தேசிய செயலமர்வு உடன் ஸ்ராட்டஜிக் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் கைகோர்ப்பு

Gavitha   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் காணப்படும் ஆயுள் காப்புறுதி முகவர் நிறுவனமான ஸ்ராட்டஜிக் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ், இந்த ஆண்டு 7ஆவது தடவையாக நடைபெறும் ஆயுள் காப்புறுதி ஆலோசகர்களின் தேசிய செயலமர்வு மாநாட்டுக்கான “சர்வதேச முகவர் பங்காண்மை” அனுகூலங்களைப் பெற்றுக்கொடுக்க முன்வந்துள்ளது.

இந்த மாநாட்டுக்கு கிடைக்கும் அனுசரணை ஊடாக இலங்கையின் ஆயுள் காப்புறுதி முகவர் நிறுவனமான ஸ்ராட்டஜிக் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸுக்கும் அனுகூலம் கிட்டவுள்ளது. 2015இல் சந்தைப்பங்கின் 10 சதவீதத்தைத் தன்வசம் கொண்டிருந்ததுடன், குறிப்பிட்ட காலமாக இலங்கையின் முதல் தர ஆயுள் காப்புறுதி முகவர் நிறுவனமாக ஸ்ராட்டஜிக் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் திகழ்ந்து வருகிறது.  

7ஆவது ஆயுள் காப்புறுதி மாநாடு ஆயுள் காப்புறுதித்துறையில் முன்னெடுக்கப்படும் மிகச்சிறந்த நிகழ்வாக அமைந்துள்ளது. இந் நிகழ்வுடன் கைகோர்ப்பதற்கு இலங்கையின் ஆயிரக்கணக்கான ஆயுள் காப்புறுதி விற்பனைப் பிரதிநிதிகள் ஒன்று திரளவுள்ளனர்.  

இந்த மாநாடு, “இலங்கையர்கள் அனைவரும் காப்புறுதி செய்து கொண்ட தினம்” எனும் தொனிப்பொருளில் நடைபெறுகிறது. முகவர் நிறுவனம் எனும் வகையில், ஸ்ராட்டஜிக் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் பின்பற்றும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்துள்ளது. 2015 இல் 2 இலக்கங்களிலமைந்த சந்தைப் பங்கை எய்துவது என்பதை ஸ்ராட்டஜிக் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கமைய இந்த மாநாட்டின் தொனிப்பொருளான அனைத்து இலங்கையர்களுக்குமான காப்புறுதி என்பது அமைந்துள்ளது. காப்புறுதிகளை வழங்கி வரும் இந்த வேகத்தினூடாக எம்மால் எதிர்காலத்தை தற்போதே எய்தக்கூடியதாக இருக்கும்.

இந்த இலக்கை அடைவதற்கு நாம் எவ்வாறு பணியாற்றியிருந்தோம், எமது கோட்பாட்டில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது பற்றி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் மாநாட்டில் பங்குபற்றுவோர் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இம்மாநாட்டின் உத்தியோகபூர்வ பங்காளராகச் செயலாற்றும் நாம், எமது பிரசன்னத்தின் உணர்வை வெளிப்படுத்தியிருந்தோம். இலங்கையின் சகல காப்புறுதி செய்து கொள்ளாத நபர்களுக்கும் காப்புறுதி எனும் இலக்கை நோக்கி எமது வர்த்தக நாமம் எவ்வாறு செயலாற்றியிருந்தது என்பது தொடர்பில் சகல பங்குபற்றுநர்களும் அறிந்து கொள்வார்கள். குறிப்பாகத் தேசிய மட்டத்தில் காணப்படும் இடர்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவியாக அமையும். 

கிரெசன்ட் குளோபல் சவுத் ஏசியாவின் துணை நிறுவனமாக ஸ்ராட்டஜிக் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் திகழ்கிறது. கூட்டாண்மை தலைமைத்துவம் எனும் ஒரே குடையின் கீழ் இரு நிறுவனங்களும் காணப்படுகின்றன. மாற்று அம்சங்களை நோக்கி வாடிக்கையாளர்கள் சென்றடைவதை கிரெசன்ட் குளோபல் தெரிவுகளிலான காப்புறுதி தீர்வுகள் இடமளியாது. ஏனெனில் இதன் தீர்வுகள் மிகவும் பரந்தவை. காப்புறுதி, மீள்காப்புறுதி, இடர் ஆலோசனை, ஊழியர் அனுகூலங்கள், மனித மூலதன ஆலோசனை, இடர் பொறியியல் மற்றும் விநியோகத்தொடர் ஆலோசனை சேவைகள் போன்றன தனியார் மற்றும் பொதுத்துறைகளுக்கு நிறுவனத்தினால் வழங்கப்படுகின்றன.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .