Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 09 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் காணப்படும் ஆயுள் காப்புறுதி முகவர் நிறுவனமான ஸ்ராட்டஜிக் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ், இந்த ஆண்டு 7ஆவது தடவையாக நடைபெற்ற ஆயுள் காப்புறுதி ஆலோசகர்களின் தேசிய செயலமர்வு மாநாட்டுக்கான ‘சர்வதேச முகவர் பங்காண்மை’ அனுகூலங்களை பெற்றுக்கொடுக்க முன்வந்திருந்தது. இந்த மாநாட்டுக்கு கிடைக்கும் அனுசரணை ஊடாக இலங்கையின் ஆயுள் காப்புறுதி முகவர் நிறுவனமான ஸ்ராட்டஜிக் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸுக்கும் அனுகூலம் கிடைத்திருந்தது. 2015இல் சந்தைப்பங்கின் 10 சதவீதத்தை தன்வசம் கொண்டிருந்ததுடன், குறிப்பிட்ட காலமாக இலங்கையின் முதல் தர ஆயுள் காப்புறுதி முகவர் நிறுவனமாக ஸ்ராட்டஜிக் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் திகழ்கிறது.
7ஆவது ஆயுள் காப்புறுதி மாநாடு ஆயுள் காப்புறுதித்துறையில் முன்னெடுக்கப்படும் மிகச் சிறந்த நிகழ்வாக அமைந்துள்ளது. இந்த நிகழ்வுடன் கைகோர்ப்பதன் மூலமாக, இலங்கையின் ஆயிரக்கணக்கான ஆயுள் காப்புறுதி விற்பனை பிரதிநிதிகள் ஒன்று திரளவுள்ளனர்.
இந்த மாநாடு, ‘இலங்கையர்கள் அனைவரும் காப்புறுதி செய்து கொண்ட தினம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெறுகிறது. முகவர் நிறுவனம் எனும் வகையில், ஸ்ராட்டஜிக் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் பின்பற்றும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்துள்ளது. 2015இல் 2 இலக்கங்களில் அமைந்த சந்தைப் பங்கை எய்துவது என்பதை ஸ்ராட்டஜிக் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கமைய இந்த மாநாட்டின் தொனிப்பொருளான அனைத்து இலங்கையர்களுக்குமான காப்புறுதி என்பது அமைந்துள்ளது. காப்புறுதிகளை வழங்கி வரும் இந்த வேகத்தினூடாக எம்மால் எதிர்காலத்தை தற்போதே எய்தக்கூடியதாக இருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .