Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜனவரி 18 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் பாவித்த கார்களின் பதிவாகியுள்ள பயணத்தூரம் எவ்வாறு கணிப்பிடப்படுகிறது? உங்கள் வாகனங்களை இணையத்தினூடாக விற்பனை செய்யவும், வாங்கவும் சிறந்த தளமாக அமைந்துள்ள Carmudi, இலங்கையின் வெவ்வேறு நகரங்களிலிருந்து பெற்றுக் கொண்ட ஆயிரக்கணக்கான கார்கள் பற்றிய தரப்படுத்தல்களை ஆராய்ந்து இதை கண்டறிந்துள்ளது. வாகனங்களின் ரகம், எரிபொருள் வகை மற்றும் வாகனத்தின் வயது போன்றவிடயங்களை கவனத்தில் கொண்டு, இந்த ஆய்வை இந்த ஆய்வுக் குழு முன்னெடுத்திருந்தது.
இலங்கையில் சாதாரணமாக கார்களின் சராசரி பயன்படுத்திய தூரம் 38,500 கிலோமீற்றர்களாக அமைந்துள்ளது. இது Carmudi சந்தைகளின் சராசரி பெறுமதியை (42,000 km) விட இது 9 சதவீதம் வரை குறைவாகும். குறைந்த காலம் பாவித்த கார்களின் சராசரித் தூரம் 23,000 கிலோமீற்றர்களாகவும் ஐந்து ஆண்டுகள் வரை பயன்படுத்திய கார்களின் சராசரி தூரம் 57,000 கிலோமீற்றர்களாகவும் அமைந்துள்ளன.
இலங்கையில் பெருமளவில் குறைந்தளவு பயணத்தூரங்களை பாவித்த கார்கள் பதிவு செய்திருக்கின்றமைக்கு பிரதான காரணமாக, நீண்ட தூரங்கள் பயணங்களை மேற்கொள்ள உகந்த வீதிகள் இன்மை அமைந்துள்ளது. நாட்டின் 70 சதவீதத்துக்கும் அதிகமான போக்குவரத்து தேசிய வீதிகளில் இடம்பெறுகின்றன. எனவே, இவை முறையாக பராமரிக்கப்படுகின்றமை மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.கட்டுப்பாடற்ற வீதியோர அபிவிருத்தி மற்றும் தரக்குறைவான பராமரிப்பு போன்றன போக்குவரத்துக்கு பாதகமான விடயங்களாக அமைந்துவிடுகின்றன. சிறந்த தரம் வாய்ந்த நகரங்களுக்கிடையிலான வீதி கட்டமைப்பு அத்தியாவசிமானதாகும். ஏனெனில் 65 சதவீதத்துக்கும் அதிகமான நாட்டின் குடிமக்கள், கிராமங்களில் வசிக்கின்றனர். இவர்கள் இணைக்கப்பட்ட வீதிகளில் அதிகளவு தங்கியுள்ளனர்.
பயணத்தூரங்களை வாகன தயாரிப்புகள் மூலமாக ஆராய்ந்திருந்த போது,ஜப்பானிய வர்த்தக நாமங்கள் Carmudi இல் விற்பனைக்காக பதிவு செய்யப்படும் முன்னர் அதிகளவு தூரம் பயணித்துள்ளமையை அறிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக Honda, Toyota மற்றும் Nissan ஆகிய தெரிவுகள் 31,000 கிலோமீற்றர்கள் முதல் 34,000 கிலோமீற்றர்கள் வரை அமைந்துள்ளன. அதியுயர் தூரம் Suzuki ரக கார்களில் பதிவாயிருந்ததுடன், 47,000 கிலோமீற்றர்களாக பதிவாகியுள்ளது.
இறுதியாக, பயணத்தூரங்களியல் எரிபொருள் வகைகளின் தாக்கம் பற்றி Carmudi கவனம் செலுத்தியிருந்தது. டீசல் எரிபொருளில் பயணித்த கார்களில் அதிகூடிய தூரமாக 49,000 கிலோமீற்றர்கள் பதிவாகியிருந்தது. இதைத் தொடர்ந்து ஹைபிரிட் ரக கார்கள் (29,100km) ஆக பதிவாகியிருந்ததுடன், பெற்றோல் ரக கார்கள் (22,000km) ஆக பதிவாகியிருந்தன. டீசல் ரக கார்கள் அதிகளவு தூரம் பயணிப்பதற்கு காரணமாக டீசல் என்ஜின்கள் 15 சதவீதம் வரை மேலதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கக்கூடியன. இதன் காரணமாக அதிகளவு தூரம் பயணிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இந்த ஆய்வு தொடர்பில் Carmudi LK இன் முகாமைத்துவப் பணிப்பாளர் ‡பிராஸ் மார்கார் கருத்து தெரிவிக்கையில், 'இந்த வகையாக வாகனங்களில், டீசல் வாகனங்களில் ஒரு கிலோமீற்றர் பயணிப்பதற்கான செலவீனம் பிரதான காரணியாக அமைந்துள்ளது. ஆனாலும், எதிர்காலத்தில் பாவனையில் ஹைபிரிட் ரக வாகனங்கள் டீசல் ரக வாகனங்களை விட உயர் நிலையில் காணப்படும் என நாம் எதிர்பார்க்கிறோம். ஏனெனில் பாவனையாளர்களுக்கு ஒரே விதமான பயண தூரத்தை பெற்றுக் கொள்ள முடிவதுடன், சூழலுக்கு நட்புறவானதாகவும் அமைந்துள்ளன. சராசரி ஹைபிரிட் வாகன மீள் விற்பனை பெறுமதியும் டீசல் வாகனங்களை விட அதிகமாக அமைந்துள்ளன. இந்த நிலையை காண்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம், ஏனெனில் அதிகளவு சூழல் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்படுகின்றது' என்றார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago