Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாற்றமடைந்து வரும் இன்றைய தொழில்நுட்ப உலகில் சமூகப் பிரச்சினைகள், தீவிரவாதம், மற்றும் பாலியல் பிரச்சினைகள் ஏற்படக் காரணமாக அமைவது கல்வி அறிவு மற்றும் வேலையற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை என ஆய்வுகள் காட்டுகின்றன.
அண்மைக்கால ஆய்வின் படி மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 11 சதவீதமானோர் தொழில் வாய்ப்பில்லாமல் இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் கிழக்கு மாகாணத்திலுள்ள இளம் சமுதாயத்தினருக்கு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க பாம் நிறுவனம் தீர்மானித்தது.
இதன் முதல் கட்டமாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரையும், உதவித் திட்டமிடல் பணிப்பாளரையும், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் உதவி அரசாங்க அதிபர் ஆகியோரை சந்தித்து இத்திட்டம் தொடர்பிலான தெளிவுப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டதுடன் அது சம்பந்தமாக ஆக்கபூர்வமான ஆலோசனைகளும் பெறப்பட்டது.
இதன்போது பாம் நிறுவனமும் ஜயலத் தொழில்நுட்ப தொழிற்பயிற்சி நிறுவனமும் இணைந்து மட்டக்களப்பிலுள்ள இளைஞர்களுக்கு கனரக வாகன தொழிற்பயிற்சி பாடத் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அதன் ஊடாக இளம் சமுதாயத்தின் எண்ணங்களை மேம்படுத்தவும் சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் முடியுமெனவும் நம்பிக்கை வெளியிட்டது.
மட்டக்களப்பில் தொழில்வாய்ப்புக்களைத் தேடிக் கொண்டிருக்கும் மற்றும் தொழில்வாய்ப்புக்களைத் தேடுவதற்கு தங்களுக்கு தகுதியில்லை என ஓரமாகி இருக்கும் இளைஞர்களுக்காகவே இந்த செயற்றிட்டத்தை பாம் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
ஜயலத் தொழில்நுட்ப தொழிற்பயிற்சி கல்லூரியின் ஊடாக கல்வித் தகைமை இல்லாமலேயே
தொழிற்பயிற்சியைப் பெற்று சிறந்த சான்றிதழ்களோடு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறந்த தொழில் வாய்ப்பொன்றைப் பெற்றுக் கொள்ள முடிவதோடு, மாதம் ஒன்றுக்கு உள்நாட்டில் 50,000 ரூபாய் சம்பளமாகவும் வெளிநாட்டில் 1,50,000 ரூபாய் வரையிலான சம்பளத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்தப் பயிற்சிக் கல்லூரியில் பாடநெறியொன்றை மேற்கொள்வதற்கு கல்விப் பொது தராதர சாதாரண தரத்திலோ அல்லது உயர் தரத்திலோ சித்தியடைந்திருக்க வேண்டுமென்ற தேவையில்லை. அதற்குப் பதிலாக உங்களது கடின உழைப்பும் முயற்சியும் மாத்திரம் இருந்தால் போதும்;.
12 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago