Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மே 10 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்கொட்டுவை பீங்கான் பீல்சி நிறுவனம் கொவிட்-19 உள்ளிட்ட சுவாசக்குழாய் நோய்த் தொற்றுக்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் பயன்படுத்தக் கூடிய புதிய தனிப்பயனாக்கப்பட்ட நீராவி இன்ஹேலர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வைத்தியர் சரித் நாணயக்காரவின் வடிவமைப்பு மற்றும் ஆலோசனைக்கு அமைய இந்த மாற்றியமைக்கப்பட்ட நீராவி இன்ஹேலர் தற்பொழுது கொரோனா வைரஸ் நோயால் (கொவிட்-19) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ சேவையை வழங்கும் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கிடைக்கும்.
தங்கொட்டுவை நீராவி இன்ஹேலர் பயன்படுத்த எளிதானது என்பதுடன் பல சுவாசக்குழாய் தொடர்பான நிலைமைகளைத் தடுக்க வீடுகளில் பயன்படுத்தலாம். இந்தத் தயாரிப்பு நிசென் ஸ்டீமர் எனப்படும் நீராவி இயந்திரத்தின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாகும். இது காலவதியானது எனக் கருதப்பட்டாலும் தற்பொழுதும் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகிறது.
தங்கொட்டுவை நீராவி இன்ஹேலர் ஒரு மூக்குசார்ந்த நீராவி குழாயுடன் காணப்படுவதுடன், இது நீராவியை வாய்/மூக்கின் ஊடாக நேரடியாகக் கொண்டு சேர்க்கும். முன்னணி சைனசுக்கு சிகிச்சையளிக்கும்போது உள்ளிழுக்கும் நீராவி முன்னணி சைனஸை நோக்கி நகர ஒரு நெருக்கமான பாதையை வழங்கும்.
தயாரிக்கப்பட்ட முதல் தொகுதி இன்ஹேலர்களில் பயன்படுத்தப்பட்ட இறப்பர் குழாய் மாற்றியமைக்கப்பட்டு பீங்கான் மூலம் மாற்றப்பட வேண்டும், இதனால் அது தொற்று நீக்கப்பட்டு விரைவில் கிருமிகளை அழிக்கும். இன்ஹேலர் பகிரப்பட்டாலும் கூட ஒரு நோயாளியிடமிருந்து மற்றுமொரு நோயாளிக்குப் பரவுவதை தவிர்த்து கிருமிகள் கொல்லப்படுவதையும் இது உறுதிசெய்யும்.
இந்தத் தயாரிப்பு பயன்படுத்த எளிதானது மற்றும் வீடுகளிலும் பயன்படுத்தலாம். ஏனெனில் இது கிருமிநாசினி இரசாயனங்கள் அல்லது கொதிநிலையில் எளிதில் கிருமி நீக்கம் செய்யலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago