2025 ஜூலை 26, சனிக்கிழமை

தசலக்ஷபதி டிக்கெட் சந்தையில்

Gavitha   / 2017 மார்ச் 30 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல தசாப்தங்களாக இந்நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதில் தன்னை அர்ப்பணித்துள்ள அபிவிருத்தி லொத்தர் சபை, விற்பனையில் சாதனை படைத்த அதன் “இலட்சாதிபதி” லொத்தரினை “தசலக்ஷபதி” என வாடிக்கையாளர்கள் மத்தியில் அறிமுகம் செய்துள்ளது. அதிகளவில் அதிர்ஷ்டசாலிகளை உருவாக்கும் நோக்கில் விசேட வெற்றி வாய்ப்புகள் பலவற்றுடன் “இலட்சாதிபதி” டிக்கெட்டானது, “தசலக்ஷபதி” எனும் புதிய தோற்றத்துடன் வாடிக்கையாளர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் அதிர்ஷ்ட இலக்கங்கள் மூன்றும், ஆங்கில எழுத்து மற்றும் திகதியினை பொருத்தி முதல் பரிசாக 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் வாகனம் ஒன்றினை வாடிக்கையாளர் வென்றெடுக்க முடியும். மேலும் யாதாயினும் ஒரு இலக்கத்துக்கு ரூ.20 உம் யாதாயினும் இரண்டு இலக்கங்களுக்கு ரூ.200 உம், மூன்று இலக்கங்கள் பொருந்தினால் ரூ.100,000 ஆம் வழங்கப்படுகிறது. மேலும் யாதாயினும் ஒரு இலக்கம் மற்றும் ஆங்கில எழுத்து பொருந்தினால் ரூ.100 உம், யாதாயினும் இரண்டு இலக்கங்கள் மற்றும் ஆங்கில எழுத்து பொருந்தினால் ரூ.1,000 உம், மூன்று இலக்கங்களுடன் ஆங்கில எழுத்து பொருந்தினால் பத்து இலட்சமும், மூன்று இலக்கங்களுடன் ஆங்கில எழுத்து மற்றும் அதிர்ஷ்ட நாள் பொருந்தினால் மோட்டார் வாகனம் ஒன்றினையும் “தசலக்ஷபதி” டிக்கெட் மூலமாக வெல்ல முடியும்.  

மிகவும் குறைந்த பந்து இலக்கங்களினால் இந்த சீட்டிழுப்பு இடம்பெறுவதால் லொத்தரினை வாங்குபவர்களின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சீட்டிழுப்புக்காக 55 பந்துகளில் மூன்று பந்துகளும், வேறு 26 பந்துகளில் ஒரு பந்தும், ஏழு நாட்களுக்குரிய பந்துகளில் ஒரு பந்தும் தேர்ந்தெடுக்கப்படுவது இந்த டிக்கெட்டின் விசேட அம்சமாகும்.  

இந்நாட்டு லொத்தர் வரலாற்றில் விற்பனையில் சாதனையீட்டிய “இலட்சாதிபதி” டிக்கெட், 50 சீட்டிழுப்பு வாரத்தில் மிகக்குறைந்த காலத்தில் 2,700 இற்கும் மேற்பட்ட இலட்சாதிபதிகளை உருவாக்கியுள்ளது. அதற்கமைய, ஒரு சீட்டிழுப்பின் போது 40 இலட்சாதிபதிகள் உருவாக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட ஒரு தொகையினருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட வெற்றி வாய்ப்பு அதிக நபர்களிடம் பகிரும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்ட “இலட்சாதிபதி” லொத்தர், மற்றுமொரு படிமுறையாக பலரை பத்து இலட்சாதிபதிகளாக உருவாக்கும் வகையில் “தசலக்ஷபதி” டிக்கெட்டினை அபிவிருத்தி லொத்தர் சபை மூலமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் அறிமுகத்துடன் அபிவிருத்தி லொத்தர் சபை இந்நாட்டின் அபிமானத்தை வென்ற லொத்தர் நிறுவனமாக தனது நாமத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X