2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தன்னியங்கும் வாகனமொன்றை அறிமுகம் செய்ய Ford திட்டம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

முழுமையாக தன்னியக்க SAE level 44-திறன் கொண்ட வணிக நோக்கிலான வாகனத்தை 2021 இல் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருவதாக Ford அறிவித்துள்ளது.

இந்த இலக்கை அடிப்படையாகக் கொண்டு, தனது தன்னியக்க வாகன அபிவிருத்தியை மேற்கொள்ளும் வகையில், குழசன நிறுவனம் நான்கு ஆரம்ப நிலை நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளதுடன், முதலீடுகளையும் மேற்கொண்டு வருகிறது. இதற்கமைய சிலிக்கன் வெலி அணி மற்றும் Palo Alto பல்கலைக்கழக அணியை இரட்டிப்பாக்கவும் திட்டமிட்டுள்ளது.

Ford தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மார்க் ஃபீல்ட்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், 'வாகனங்களின் தன்னியக்கம் என்பது அடுத்த தசாப்த காலத்தில் பெருமளவில் முன்னெடுக்கப்படும். சமூகத்தில் தன்னியக்க வாகனங்கள் பெருமளவானத் தாக்கத்தை ஏற்படுத்துவதை எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.

100 வருடங்களுக்கு முன்னர் Ford இன் நடமாடும் பொருத்துகைப் பகுதி இதனை மேற்கொண்டிருந்தது.  மில்லியன் கணக்கான மக்களின் பாதுகாப்பு மற்றும் சமூக மற்றும் சூழல் சவால்களை மேம்படுத்தும் வகையிலானத் தன்னியக்க வாகனத்தை வீதியில் அறிமுகம் செய்வதற்கு நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்' என்றார்.

2021 இல் தன்னியக்க வாகனங்கள் துறையில் முன்னோடியாக திகழ்வது என்பது, Ford நிறுவனத்தின், Smart Mobility  திட்டம் மற்றும் இணைப்பு, நடமாடும் திறன், வாடிக்கையாளர் அனுபவம், தரவுகள் மற்றும் பகுப்பாய்வுகள் போன்றவற்றில் தங்கியுள்ளன.ஒரு தசாப்த காலத்துக்கு மேலான வாகனங்கள், ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளின் அடிப்படையில், குழசன இன் முழு தன்னியக்க வாகனம் என்பது வாகனங்கள் பொறியியலாளர்கள் சம்மேளனத்தினால், 4ஆம் நிலை இயல்தகைமைக் கொண்ட வாகனம் என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதில் சுக்கான் அல்லது எரிவாயு அல்லது தடுப்பு பெடல்கள் இன்மை குறிப்பிடத்தக்கது. வணிக நடமாடும் தேவைகளுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம், பகிர்வு அடிப்படையான பயணங்களுக்காக உயர் பெறுமதிகளில் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்படும்.

Ford இன் சர்வதேச தயாரிப்பு அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான நிறைவேற்று பதில் தலைவரும், பிரதம தொழில்நுட்ப அதிகாரியுமான ராஜ் நாயர் கருத்து தெரிவிக்கையில், Ford என்பது, 10 ஆண்டுகளுக்கு மேலாக, தன்னியக்க வாகனங்களைப் பரிசோதித்து வடிவமைத்து வருகிறது. மென்பொருள் மற்றும் இனங்காணல் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒன்றிணைத்து பரிசோதிக்கக்கூடிய திறனை நாம் கொண்டுள்ளோம். அத்துடன் உயர் தரம் வாய்ந்த வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு அவசியமான பொறியியல் நுட்பத்தை நாம் கொண்டுள்ளோம்' என்றார்.

பல்வேறு முதன்மை செயற்பாடுகளை அறிமுகம் செய்துள்ள குழசன முதன் முதலாக மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் Mcity பகுதியில் தன்னியக்க வாகனங்களின் பரிசோதனைகளை ஆரம்பித்திருந்தது. இதன் போது பனி படலத்தில் வாகனங்களின் செயற்பாடு, இரவு வேளைகளில் மற்றும் முழுமையான இருளில் வாகனங்களின் இயக்கம் போன்வற்றையும் பரிசோதித்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X