2025 மே 22, வியாழக்கிழமை

தபால் திணைக்களத்தின் புதிய பணப் பரிமாற்றுத் திட்டம்

Editorial   / 2018 மார்ச் 26 , பி.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

  - க.கமல்   

அலைபேசிகள் வாயிலாக அனுப்பப்படும் பணத்தை, தானியங்கிப் பண மீட்பு (ஏ.டி.எம்) இயந்திரங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் புதிய திட்டமொன்று, தபால் அமைச்சினால், அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தில், சம்பத் வங்கியும், தபால் அமைச்சுடன் கைகோர்த்துள்ளது.

பழைமையான நிதிப் பரிமாற்ற முறைமைகளில் மாற்றங்களை மேற்கொண்டு, தொழில்நுட்பத்துடன் கூடிய தபால் சேவைகளை முன்னெடுக்கும் நோக்கில், இத்திட்டம்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தபால் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

இத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான நிகழ்வு, தபால் அமைச்சில், கடந்த 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இத்திட்டத்தின் ஊடாக, தபால் துறையில், புதுமைமிக்க மாற்றங்களை எதிர்பார்த்து உள்ளதாகவும் விரைவில், அதன் பலனை, நாட்டு மக்கள் நுகர முடியும் என்றும், அவர் மேலும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம், தொலைபேசி வலையமைப்புகள் ஊடாக அனுப்படும் பணத்தை, சம்பத் வங்கியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள  தானியங்கிப் பண மீட்பு இயந்திரங்கள் (ஏ.டி.எம்) மூலம் பணத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .