Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, இரு புதிய ATM இயந்திரங்களை திகன, தம்புள்ளையில் திறந்துள்ளது. வங்கியின் உயரதிகாரிகள் மற்றும் பெறுமதியான வாடிக்கையாளர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
திகனயில் அமைந்துள்ள புதிய ATM இயந்திரம், Linea Clothing & Linea Intimates, கண்டி தொழிற்பேட்டை, BOI, பல்லேகல எனும் முகவரியிலும்,
தம்புளை ATM இயந்திரம், கிமன்ஹல, இல. 754, அனுராதபுர வீதி, தம்புளை எனும் முகவரியிலும் அமைந்துள்ளது.
புதிய ATM இயந்திரங்கள் வங்கியின் ATM வலையமைப்பை விஸ்தரிக்கும் திட்டத்தின் பிரகாரம் அமைந்துள்ளன. இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான வங்கியியல் சேவைகளைப் பெற்றுக் கொடுப்பது வங்கியின் எதிர்பார்ப்பாகும்.
நிகழ்வுகளின் சிறப்பு விருந்தினர்களாக திகன, பல்லேகல சுதந்திர வர்த்தக வலய பணிப்பாளர் ஜயலத் மொஹோத்தல, MAS ஹோல்டிங்ஸ் வட பிராந்திய பொது முகாமையாளர் கீர்த்தி முனசிங்க, தம்புளை பகுதியில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் கிளை வலையமைப்புக்கான சிரேஷ்ட பதில் தலைவர் ஷிஹான் டேனியல் மற்றும் கிமன்ஹல ஹோட்டலின் உரிமையாளர் சாலிய தயானந்த ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .