2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

திறன் படைத்த பணியாளர்களுக்கு ஜப்பான் செல்லும் வாய்ப்பு

S.Sekar   / 2022 ஜனவரி 21 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையர்களை ஜப்பானுக்கு உள்வாங்கும் திறன் படைத்த ஊழியர் நிகழ்ச்சித் திட்டம் அறிமுகம் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி பங்கேற்றிருந்தார். இந்நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் ஊக்குவிப்பு மற்றும் சந்தைப் பரம்பல் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன மற்றும் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தினூடாக இலங்கையர்களை உள்வாங்குவதற்கு முன்னெடுக்கப்படும் பரீட்சை ஜனவரி 25 ஆம் திகதி ஆரம்பமாகி அடிக்கடி இடம்பெறும்.

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடையே இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 70 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளமையை கொண்டாடும் வகையில், இலங்கையின் திறன் படைத்த மக்களுக்கு ஜப்பானில் இரு பிரிவுகளில் தொழில் வாய்ப்புகளை வழங்கி ஆதரவளிக்க தன்னை அர்ப்பணித்துள்ளது. அதனூடாக இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்பாடல்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

தாதியியல் பராமரிப்பு மற்றும் உணவு சேவைகள் போன்ற பிரிவுகளில் திறன் படைத்த இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகள் காணப்படுகின்றன. விண்ணப்பதாரிகள் ஜப்பானிய மொழிப் பரீட்சைக்கும், திறன் பரீட்சைக்கும் இலங்கையில் தோற்ற முடியும். மேலதிக தகவல்களுக்கு இலங்கையின் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் பணியகத்தின் இணையத்தளத்தைப் பார்க்கவும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .