2025 மே 21, புதன்கிழமை

திறமையை மேம்படுத்த எயார்டெல் நடவடிக்கை

Editorial   / 2018 மே 13 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகல மட்டத்திலும் திறமையை மேம்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், எயார்டெல் லங்கா அண்மையில் கள விற்பனை அதிகாரிகளுக்கான வளர்ச்சி திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது. இது களத்திலுள்ள விற்பனை செயலணிக்கு அனுகூலங்கள், ஈடுபாடு, பயிற்சி மற்றும் தொழில்நிலை வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்கும் அர்ப்பணிப்பான திட்டமாக அமைந்துள்ளது.

எயார்டெல் லங்காவைச் சேர்ந்த வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அணியால் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், இதனூடாக களத்திலுள்ள விற்பனை அதிகாரிகளின் தொழில் அனுபவத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

தனது முழுநேர ஊழியர்களின் மனித வளங்கள் செயற்பாடுகளில் பெருமை கொள்ளும் கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில், எயார்டெல் லங்கா இந்த அனுபவத்தை தனது விற்பனை அதிகாரிகளுக்கும் பெற்றுக்கொடுக்க தீர்மானித்தது. போட்டிகரமான சந்தையில் அவர்களின் கடுமையான உழைப்பை வெளிப்படுத்துகின்றமைக்காக வெகுமதிகள் மற்றும் கௌரவிப்பை வழங்குவதற்கு தீர்மானித்தது.

இந்த திட்டம் தொடர்பில், எயார்டெல் லங்கா பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவ பணிப்பாளருமான ஜினேஷ் ஹெட்ஜ் கருத்துத் தெரிவிக்கையில், ‘எயார்டெலைச் சேர்ந்த விற்பனை செயலணி, எமது சகல சேவைகளையும் நாடு முழுவதிலும் கொண்டு செல்வதற்கான பொறுப்பை வகிக்கின்றது.

ஆனாலும் களத்தில் அவர்களின் பிரசன்னத்தின் காரணமாக நிறுவனத்தினால் வழங்கப்படும் அபிவிருத்தி வாய்ப்புகளை தவறவிடுகின்றனர். எயார்டெல் கள விற்பனை அதிகாரிகளுக்கான வளர்ச்சி திட்டத்தினூடாக அவர்களின் தொழில் வாழ்க்கையை கட்டியெழுப்பக்கூடிய வழிமுறைகள் இனங்காணப்படும். இதனூடாக அவர்களுக்கு தமது தொழில் நிலை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள சிறந்த அடித்தளம் ஏற்படுத்தப்படும்’ என்றார்.

வெகுமதிகள் மற்றும் அனுகூலங்களுக்கு மேலதிகமாக பயிற்சி முக்கிய பங்கை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த நிலையில் தமது திறமைகளை வெளிப்படுத்தும் விற்பனை அதிகாரிகளுக்கு இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகத்திடமிருந்து சந்தைப்படுத்தலில் ஆரம்பநிலை சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

அத்துடன், எயார்டெல் விற்பனை கல்வியகத்தைச் சேர்ந்த உள்ளக நிபுணத்துவ அணியினால் முன்னெடுக்கப்படும் பயிற்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படும். புதிய கள விற்பனை அதிகாரிகளுக்கு தொலைத் தொடர்பாடல்களுக்கான அறிமுக பயிற்சியும் வழங்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .