2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

தேசிய வியாபாரச் சிறப்பு விருதுகள் 2023 நிகழ்வில் SLT-MOBITEL’க்கு கௌரவம்

Freelancer   / 2023 டிசெம்பர் 01 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL நிறுவனத்துக்கு, அண்மையில் நடைபெற்ற தேசிய வியாபாரச் சிறப்புகள் விருதுகள் 2023 நிகழ்வில், நான்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் தொலைத் தொடர்பாடல் துறையில் ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சி (SLT) காண்பிக்கும் அர்ப்பணிப்புச் சிறப்பு மற்றும் சிறந்த சாதனைகளை மேலும் உறுதி செய்து கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் அமைந்திருந்தன.

உள்நாட்டு சந்தை சென்றடைவுச் சிறப்பு – இரண்டாமிடம், உட்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள் பிரிவு விருது – இரண்டாமிடம், மிகப் பெரிய வியாபாரம் பிரிவுக்கான மெரிட் விருது மற்றும் கூட்டாண்மை ஆளுகைச் சிறப்பு விருது போன்றன ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.

SLT-MOBITEL இன் குழும பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க மற்றும் குழும நிதி அதிகாரி சஞ்ஜீவ சமரநாயக்க ஆகியோர் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டதுடன், நிறுவனத்தின் மேலும் சில அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தேசிய வியாபாரச் சிறப்பு விருதுகள் (NBEA) வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுவதுடன், வியாபார சமூகத்தினால் பெருமளவில் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாகவும் அமைந்துள்ளது. இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனம் (NCCSL) இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்வதுடன், இந்த விருதுகளினூடாக, சிறப்பாக செயலாற்றி, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பங்களிப்பு வழங்கிய வியாபார நிறுவனங்கள் கௌரவிக்கப்படுகின்றன.

தேசிய வியாபாரச் சிறப்பு விருதுகள் 2023 நிகழ்வில் ஸ்ரீ லங்கா ரெலிகொம் எய்தியிருந்த சிறந்த சாதனைகளினூடாக, நான்கு பிரிவுகளில் நிறுவனத்தின் சிறப்பான செயற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீ லங்கா ரெலிகொம்மினால் முன்னெடுக்கப்படும் முன்னணிச் செயற்பாடுகள், நவீன தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கான ஒப்பற்ற அர்ப்பணிப்பு போன்றவற்றை வெளிப்படுத்துவதாகவும் இந்த விருதுகள் அமைந்துள்ளன. தொலைத்தொடர்பாடல் துறையில் முன்னோடியாக SLT-MOBITEL திகழ்வதுடன், வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை தொடர்ச்சியாக விஞ்சும் வகையில் செயலாற்றுவதற்கும், புத்தாக்கத்தை முன்னெடுத்துச் செல்லல் மற்றும் இலங்கையில் டிஜிட்டல் மாற்றத்துக்கு பங்களிப்பு வழங்கல் போன்றவற்றையும் எதிர்பார்க்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X