Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 நவம்பர் 13 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊழியர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள நாட்டின் சுற்றுலாத்துறை, பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களை துறையுடன் இணைத்துக்கொள்வதற்கு ஊக்குவிக்கும் வகையில் மூன்று ஆண்டு காலப்பகுதிக்கு 50 மில்லியன் ரூபாய் செலவில் பிரசாரச் செயற்றிட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.
இந்தத் திட்டத்தினூடாக இளைஞர்கள், பெண்கள் தனியார் துறையுடன் இணைந்து கொள்ள ஊக்குவிக்கப்படுவதுடன், பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்தவர்களையும் துறையுடன் ஹோட்டல் பணியாளர்கள், சுற்றுலாச் செயற்பாட்டாளர்கள், பயண முகவர்களாக இணைந்து கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள். இந்தத் துறையில் பணியாற்றுவதற்கு முன்வரும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து செல்வதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலாப் பயணிகள் ஹோட்டல்கள் சம்மேளனத்தின் தலைவர் சனத் உக்வத்த கருத்துத் தெரிவிக்கையில், “இளைஞர்களுக்கு தமது தொழில் நிலை விருத்தி தொடர்பான விளக்கங்களை நாம் பெற்றுக் கொடுக்க திட்டமிட்டுள்ளதுடன், அவர்கள் வெற்றிகரமான ஹோட்டல் துறை ஊழியர்களாகத் திகழ்வதற்கு அவசியமான வழிகாட்டல்களையும் வழங்க எண்ணியுள்ளோம். பெண்களின் பங்களிப்பும் துறையில் மிகவும் குறைவாக காணப்படுகிறது. இதன் காரணமாக பெண்களையும் இந்தத்துறையில் கவர எண்ணியுள்ளோம். குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புகளை நாடும் பெண்களுக்கு, உள்நாட்டில் இந்தத்துறையுடன் இணைந்து கொள்வதனூடாக பெற்றுக் கொள்ளக்கூடிய அனுகூலங்கள் பற்றிய விளக்கங்களை வழங்குவோம். நாட்டில் இந்தத்துறையில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களாக பெண்கள் காணப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை 30 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும்” என்றார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “ஆடைத் தொழிற்றுறை, வெளிநாடுகளில் பணியாற்றுவதைப் போலன்றி, உள்நாட்டு ஹோட்டல்கள் துறை, அவற்றுடன் தொடர்புடைய சேவைகள் துறையில் தமது வளர்ச்சியைப் பதிவு செய்வதற்கு, அதிகளவு வாய்ப்புகள் காணப்படுகின்றன. வெளிநாடுகளில் காணப்படும் சங்கிலித்தொடர் ஹோட்டல்களில் பணியாற்றக்கூடிய வாய்ப்பும் கிட்டும். இதன் பிரகாரம், தென் மாகாணத்திலிருந்து ஊழியர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையை முதலில் ஆரம்பித்து, பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளான கண்டி, மத்தி, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விஸ்தரிப்பதற்கு எண்ணியுள்ளது. இந்த மூன்று வருட பிரசாரத் திட்டம் தொலைக்காட்சி, அச்சு ஊடாகங்கள் வாயிலாகவும், பிராந்திய மட்ட பயிற்சிப் பட்டறைகளின் ஊடாகவும் முன்னெடுக்கப்படவுள்ளது. மேலும் சமூக மட்டத்தில் காணப்படும் தலைவர்கள், சமயத்தலைவர்கள் ஆகியோரின் உதவிகளை நாடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று உக்வத்த மேலும் குறிப்பிட்டார்.
இந்தத்துறையில் வழங்கப்படும் அனுகூலங்களில், உயர் சேவைக் கட்டணம் அமைந்துள்ளது, இதனூடாக அவர்களின் மாதாந்தம் பெறும் சம்பளத் தொகையிலும் பார்க்க மேலதிக வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும். தமது வீடுகளிலிருந்தவாறே தொழிலுக்கு சமூகமளிக்கக்கூடிய வசதியும் கிடைக்கும்.
இந்த விடயம் தொடர்பாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையுடன் கைகோர்த்து செயலாற்றவும் துறை திட்டமிட்டுள்ளது.
2 hours ago
19 Jul 2025
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Jul 2025
19 Jul 2025