2025 ஜூலை 26, சனிக்கிழமை

நீண்ட கால முதலீடுகளில் வனவியல் துறை

Princiya Dixci   / 2017 மே 08 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலீட்டாளர்கள் பலரும் பங்குகள் மீதான தமது வெளிப்பாட்டைக் குறைத்து வருவதோடு, தமது ஒட்டுமொத்த அபாயத்தை குறைத்து அதிக முதலீட்டு திரும்பல்களை வழங்கக்கூடிய மாற்று வழிகள் மீது ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

நிலையான முதலீட்டில் விரும்பத்தக்க தெரிவாக வர்த்தக ரீதியான வனவியல் வேகமாக உருவாகி வருகிறது.

நிலையான வர்த்தக வனவியலின் சூழல் நட்புறவான துணிகர முதலீட்டில் இலங்கையின் முன்னோடியாக உள்ள சதாஹரித பிளாண்டேஷன் லிமிடெட் நிறுவனம், அறுவடை அகர்வூட்டிற்கான சர்வதேச சந்தை போக்குகள் அடிப்படையில் 2017 ஏப்ரல் 01ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் அகர்வூட் முதலீட்டு திட்டங்களின் திரும்பல்களை அதிகரித்துள்ளது. 

சதாஹரித நிறுவனமானது கடந்த 2014 முதல் மஹோகனி, சந்தனம், தேக்கு மற்றும் எகியுலேரியா(அகர்வூட்) போன்ற பல்வேறு மரங்களை வனவியல் முதலீடுகளாக வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் 26,000 இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் நிலையான வனவியல் காணிகளைக் கொண்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் 32 கிளை நிலையங்களை செயற்படுத்தி வருகிறது.

உலகில் மிகப் பெறுமதி வாய்ந்த மரங்களுள் ஒன்றாக அகர்வூட் கருதப்படுகிறது. எகியுலேரியா இன மரங்களில் உற்பத்தி செய்யப்படும் பிசினுக்கு பல்வேறு பெயர்கள் காணப்படுவதுடன், பொதுவாக இவை அகர்வூட், அலோவூட், ஈகல்வூட், கஹரூ, அகலொச்சா அல்லது அவூட் (அரேபியா மொழியில்) என அழைக்கப்படுகின்றன.

எண்ணெய், மரப்பட்டைகள், பவுடர் மற்றும் வாசணைத் திரவியங்கள், மர சிற்பங்கள், ஊதுபத்திகள் மற்றும் மருந்து வகைகள் என பல்வேறு உற்பத்திகளாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மத்திய கிழக்கு நாடுகள், ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற மிகப்பெரிய சந்தைகளில் அதிகரித்து வரும் கேள்விக்கமைய விலையும் அதிகரித்துள்ளது.

அகர்வூட் எண்ணெய்யின் விலை 30,000 முதல் 50,000 அமெரிக்க டொலராக உள்ளதுடன், அகர்வூட் பட்டைகள் சுமார் 10,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்படுகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் அதிக முதலீட்டு திரும்பல்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது.

சதாஹரித பிளாண்டேஷன் நிறுவனம், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15வது ஆண்டு நிறைவை கொண்டாடவுள்ளதுடன், அகர்வூட் மீது கவனம் செலுத்தி பெறுமதி சேர்க்கப்பட்ட புதிய உற்பத்தி தெரிவுகளை அறிமுகம் செய்து வனவியல் துறையில் ஏற்றுமதியை விஸ்தரிக்க எதிர்பார்த்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X