2025 ஜூலை 26, சனிக்கிழமை

நீர்கொழும்பில் புதிய பொலிவுடன் யூனியன் வங்கி

Gavitha   / 2017 மார்ச் 02 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீள்நிர்ணயிக்கப்பட்ட உன்னதமான வங்கியியல் அனுபவத்தினை வாடிக்கையாளருக்கு அளிக்க வேண்டும் என்ற வங்கியின் நோக்க்துக்கு அமைவாக, யூனியன் வங்கி மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் சேவைகளுடன் தமது நீர்கொழும்பு கிளையினை மீள அங்குரார்ப்பணம் செய்துள்ளது.  

இந்தப் புதிய கிளையானது, இல. 387, பிரதான வீதி, நீர்கொழும்பு என்ற முகவரியில் அமைந்துள்ளதுடன், பரபரப்பான மையமாவும், சுற்றுலாத்தலமாகவும் விளங்கும் இந்த நகரில் செயற்திறன்மிகுந்தச் சேவையை அளிக்கும் நோக்குடன், எலைட் வங்கியியல், ஃபொரெக்ஸ் சேவைகள், அடகுச்சேவை மற்றும் ரெமிட்டன்ஸ் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் செயற்பட ஆரம்பித்துள்ளது  

இந்தக் கிளையின் அங்குரார்ப்பணத்துடன்,வங்கியானது, இந்தப் பிராந்தியத்தின் நிதி மற்றும் பொருளாதார மேம்பாட்டினை ஊக்குவிப்பதான அதன் 20 வருடத்துக்கும் மேற்பட்ட அர்ப்பணிப்பினை மீள வலியுறுத்தியவாறு, நீர்கொழும்பு பகுதியிலுள்ள தனிநபர்கள் மற்றும் வர்த்தகர்களுடன் கொண்டுள்ள உறவாடலை மேலும் வலுப்படுத்துகின்றது.  

நீர்கொழும்பு யூனியன் வங்கிக் கிளையானது, அங்குள்ள எழுச்சியடையும் தொழில்முனைவோருக்கு அனுகூலம் அளிக்கும் நோக்குடன் தனிப்பயனாக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிதியீட்ட வசதிகள் மற்றும் ஆலோசனை சேவைகளையும் தொடர்ந்து அளிக்கவுள்ளது. SME நிதியீட்டத்தில் வங்கி கொண்டுள்ள நிபுணத்துவம் மற்றும் அறிவுடன், யூனியன் வங்கியானது, குறுகிய கால பணிக்கடன்கள், விநியோகஸ்தர் மற்றும் வழங்குநர் நிதியீட்டம், நீண்ட கால நிதியீட்டம் உள்ளிட்ட பல்வேறு SME வங்கியியல் தீர்வுகளைத் தொடர்ந்தும் அளிக்கவுள்ளது. இந்தத் தீர்வுகள் குறித்த பிரதேசத்திலுள்ள மீன்பிடி, சுற்றுலாத்துறை, கட்டக் கட்டமைப்புத்துறை, ஆரோக்கியம், வாகன இறக்குமதி மற்றும் சில்லறை வர்த்தக தொழிற்துறைகளுக்கு சகாயமளிக்குமென்றால் மிகையில்லை  

மேம்படுத்தப்பட்ட தொழினுட்ப வசதிகள் மற்றும் நிபுணத்துவமிக்க சேவைகளை அளிக்கும் வகையில் எப்போதும் தயார்நிலையில் உள்ள பணியாளர்களுடன் மீள்அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட நீர்கொழும்பு கிளையானது, நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகள், சிறுவர் சேமிப்புக் கணக்குகள், NRFC/FRC கணக்குகள், நிலையான வைப்புகள், வீட்டுக்கடன்கள், கல்விக்கடன்கள், லீசிங் வசதிகள், கடனட்டை மற்றும் டெபிட் அட்டைகள், வங்கி உத்தரவாதம், வெஸ்டர்ன் யூனியன் பணப்பரிமாற்ற சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சில்லறை வர்த்தக வங்கியியல் சேவைகளை அளிக்கின்றது. இவற்றுடன் வாடிக்கையாளரின் சௌகரியம் கருதி இணைய வங்கியியல் சேவைகள் மற்றும் 24 மணிநேரமும் செயற்படும் வாடிக்கையாளர் தொடர்பு நிலைய சேவையினையும் பெற்றுக்கொள்ள முடியும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X