2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

நேர்த்தியான சூழலை உருவாக்கியுள்ளது சிலோன் டொபாக்கோ கம்பனி

Gavitha   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் முதல்தர தொழில் வழங்குநர்களில் ஒன்றாக திகழும் சிலோன் டொபாக்கோ கம்பனி, அதன் ஊழியர்களுக்கு நேர்த்தியான மற்றும் ஈடுபாடுடன் கூடிய தொழில் சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் கொழும்பு மற்றும் கண்டியில் அமைந்துள்ள தனது அலுவலகங்களை மேம்படுத்தியிருந்தது.  

கடந்த காலங்களில், சிலோன் டொபாக்கோ கம்பனியினால் முன்னெடுக்கப்பட்டிருந்த செயற்பாடுகளில் ஊழியர்களின் நலனை மேம்படுத்துவது தொடர்பான கணிசமான விடயங்கள் உள்ளடங்கியிருந்தன. இப் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்சூழல்கள் காரணமாக ஊழியர்களின் மனநிலை மேம்படுத்தப்படுவதுடன், அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரித்துக் கொள்ளவும் உதவியாக அமைந்திருக்கும். அலுவலகங்களின் வடிவமைப்புகள் பெருமளவில், பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோவின் சர்வதேச ஊழியர் வர்த்தக நாம வடிவமைப்பு வழிகாட்டல்களுக்கமைய அமைந்துள்ளன. இந்தப் புனருத்தாரண மற்றும் மேம்படுத்தல் வடிவமைப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக AR Associates இன் அமோதா ரத்நாயக்கவின் சேவைகளை நிறுவனம் நாடியிருந்தது.  

இச்  செயற்றிட்டம் தொடர்பில் சிலோன் டொபாக்கோ கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், முகாமைத்துவப் பணிப்பாளருமான மைக்கல் கொயெஸ்ட் கருத்துத் தெரிவிக்கையில், “எமது ஊழியர்களுக்கு சிறந்த பணியிடத்தை ஏற்படுத்திக் கொடுப்பதன் முக்கியத்துவத்தை நாம் நன்கு உணர்ந்துள்ளோம். நேர்த்தியான பணியிடத்தையும், எமது ஊழியர்களின் நலனில் கவனம் செலுத்துவதன் மூலமாக, வெற்றிகரமான நிறுவனமாக இயங்கக்கூடிய நிலையை எம்மால் மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும்” என்றார்.  

புனருத்தாரண மேம்படுத்தல் செயற்பாடுகள் இரு கட்டங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. புதிய பழரச நிலையம் ஒன்று அமைக்கப்பட்டிருந்ததுடன், உள்ளக பகுதிகளின் தோற்றங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. புத்தாக்கமான சிந்தனை வெளிப்பாடுகளை வழங்கக்கூடிய பகுதியொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கண்டி அலுவலகங்களில் இந்தப் புனருத்தாரண செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், உணவகங்கள் மற்றும் ஓய்வு பகுதிகளும் மெருகேற்றம் செய்யப்பட்டுள்ளன.   
திறன் விருத்தியில் முன்னோடி எனும் தனது நிலையைத் தொடர்ந்து மேம்படுத்திச் செல்வதுக்கு  சிலோன் டொபாக்கோ கம்பனி தன்னை அர்ப்பணித்துள்ளது. உயர் வினைத்திறனை முன்னெடுப்பதற்கான தன்னை மேலும் ஈடுபடுத்தியுள்ளது. தனிநபர்கள் மற்றும் குழுக்கள் போன்றன வெற்றிகரமாக இயங்கக்கூடிய ஈடுபாட்டுடனான கலாசாரத்தையும் ஏற்படுத்தி வருகிறது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X