2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

நிர்மாணத்துறையின் எதிர்காலத்துக்கு வலுச் சேர்க்கும் INSEE

Gavitha   / 2017 ஜனவரி 25 , பி.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

INSEE சீமெந்து உள்நாட்டு நிர்மாணத்துறையில் புதுமை, ஆய்வு மற்றும் அபிவிருத்திகளை மேம்படுத்தும் நோக்கில், இலங்கையின் மிகப்பெரியப் பல்கலைக்கழகங்களான பேராதனை, மொறட்டுவ மற்றும் ருகுணு பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.  

உள்நாட்டில் கட்டுமானத்துறை சார்ந்த கல்வி வாய்ப்புகளை விஸ்தரித்தல் மற்றும் மேம்படுத்தல் எனும் முக்கிய பங்கினை ஏற்கும் எதிர்பார்ப்புடன், Siam City (லங்கா) நிறுவனத்தின் இலங்கைக் கூட்டாண்மை நிறுவனமான INSEE சீமெந்து மற்றும் மூன்று பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இப்பங்காண்மையை மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஜனக வீரகோன், வர்த்தக பணிப்பாளர் - Siam City சீமெந்து (லங்கா) லிமிடெட், மற்றும் உப வேந்தர்களான பேராசிரியர். உபுல் திசாநாயக்க, பேராதெனிய பல்கலைக்கழகம், பேராசிரியர்.ஆனந்த ஜயவர்தன, மொறட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் பேராசிரியர். எஸ்.ஜி.ஜே.என். சேனாநாயக்க, ருகுணு பல்கலைக்கழகம் ஆகியோர் கைச்சாத்திட்டிருந்தனர். Siam City சீமெந்து (லங்கா) லிமிடெட்டின் கொள்முதல் மற்றும் சரக்கியல் பிரிவின் பணிப்பாளர் சரித் விஜேந்த்ர மற்றும் தொழிற்றுறை விற்பனை பிரிவுத் தலைவர் சங்க செனவிரத்ன ஆகியோரினால் விஜயகோன் தலைமை தாங்கினார்.  

உலகளாவிய நிர்மாணத்துறையில் இன்று அதிக கேள்வி நிலவுவதுடன், உள்கட்டுமானம் மற்றும் நகர அபிவிருத்தி சார்ந்த சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்தப் பங்காண்மை மூலமாக, INSEE சீமெந்தின் அர்ப்பணிக்கப்பட்ட புதுமை மற்றும் பயன்பாட்டு நிறுவனமானது, இச்சவால்களை தொடர்ச்சியான ஆய்வு மற்றும் ஒன்றிணைவுகள் மூலம் அடையாளப்படுத்தவுள்ளதுடன், சந்தையில் உயர் தரம், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் தீர்வுகளை வழங்கக்கூடிய சீமெந்து உற்பத்திகளை அறிமுகம் செய்துள்ளது.  

இந்தப் பல்கலைக்கழகங்களுடனான INSEE சீமெந்தின் பங்காண்மை மூலமாக, நிதி ஆதரவு மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டல்கள் ஊடாகத் தொடர்ந்து முதலீடு செய்யப்படவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஓர் அங்கமாக வருடாந்தம் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலிருந்தும் ஆறு சிவில் மற்றும் சூழல் பொறியியல் மாணவர்களுக்கும் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளன.  

“உள்நாட்டு கட்டுமானத்துறையின் எதிர்காலத்தை வலுப்படுத்துவதற்கு தேவையான புதிய சிந்தனைகள் மற்றும் புதுமையை INSEE சீமெந்து ஊக்குவித்து வருகிறது. இலங்கையில் முன்னணி சீமெந்து உற்பத்தியாளராக உள்நாட்டுத் துறையை சரியான பாதையில் வழிநடத்துவதற்கானப் பொறுப்பினைக் நாம் கொண்டுள்ளோம். இதன் காரணமாகவே, இந்தப் பங்காண்மை ஊடாக முக்கிய பங்குதாரர் துறை, மாணவர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்களுடன் இணைந்து அவர்களது கருத்துக்கள் மற்றும் கோட்பாடுகள் எமது துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான உறுதியான அடித்தளத்தைக் கொண்டுள்ளதை உறுதிப்படுத்தி வருகிறோம்” என்றார். ித்தார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X