2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

நாவல வீதியில் ‘The Heights’

Gavitha   / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி நகர அபிவிருத்தி நிறுவனமான Millennium Housing Developers Plc (MHD) தனது இரண்டாவது உயர்மாடிக் கட்டடத்திட்டமான, கொழும்பு 5, நாவல வீதியில் அமைந்துள்ள ‘The Heights" இனை அவ்விடத்தில் இடம்பெற்ற முன்னோடி நிகழ்வுடன் ஆரம்பித்தது.

சர்வமத தலைவர்கள் கலந்துகொள்ள, ஜயந்த தர்மதாச. குழுமத்  தலைவர்- நவலோக குழுமம், ஹர்சித் தர்மதாச தலைவர்- மிலேனியம் ஹவுசிங் டெவலபர்ஸ் ஆகியோரால் நடத்தப்பட்ட முன்னோடி நிகழ்வு, இத்திட்டம் மீது நவலோக குழுமம் கொண்டுள்ள ஆர்வம் மற்றும் பொறுப்பை உறுதிசெய்வதாக இருந்தது.

கொழும்பு 5, நாவல வீதியில் அமைந்துள்ள '‘The Heights", ஆரம்பித்த உடனேயே விற்றுத் தீர்ந்ததும், MHD இன் ஆரம்ப உயர் கட்டட திட்டமுமான கொழும்பு 5, எட்மொன்டன் வீதியில் அமைந்துள்ள ‘The Heights" இன் பாரிய வெற்றியை அடித்தளமாகக் கொண்டு நிர்மாணிக்கப்படுகின்றது.

MHD ஆனது நகர அபிவிருத்தியில் நன்கறியப்பட்ட போதிலும், பெரும்பான்மைப் பங்காளர் மற்றும் பிரதான ஒப்பந்தக்காரர் என்ற வகையில் நவலோக குழுமத்தின் நுழைவானது, சந்தை நம்பிக்கையை ஊக்குவித்தல் மற்றும் MHD இன் உயர்மாடி திட்டங்களின் அதிகரித்த கேள்வி போன்றவற்றுக்குப் பங்களிப்பு செய்யும் காரணிகளாகப் பரவலாக நோக்கப்படுகின்றது. கொழும்பு 5, நாவல வீதியில் அமையவுள்ள ‘The Heights"ஆனது நவீன வாழ்க்கை முறை மற்றும் சக்தி சேமிப்பு வடிவமைப்பை உள்ளடக்கியுள்ளமையானது திருப்பு முனையாக நோக்கப்படுகின்றது.

'அது புத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்ட 64 அலகுகளை, 14 மாடிகளில் கொண்டுள்ளதுடன், இது உயர்தர வாழ்விடத்துக்கான சிறப்பான இடவசதி, நேர்த்தி, கவர்ச்சியானப் பெறுமதி ஆகியவற்றை வழங்குகின்றது. முக்கியமாக இது நாரஹேன்பிட்ட - நாவல பிரதான வீதியின் ஓரமாக அமைந்துள்ளதால், அதிக அளவிலான பெறுமதி அதிகரிப்பை உறுதியளிக்கின்றது.

ஆறு மனைப்பிரிவு மற்றும் பல பிரத்தியேக உள்ளக வடிவமைப்புகளும் மாடி மனைக்கு தனித்துவத்தை வழங்குவதுடன், கொழும்பு நகர் மற்றும் சுற்றுப்புறத்தை இரசிக்கக்கூடியவகையில் 4 ‘The Heights"அமையப்பெற்றுள்ளன.

மனைத் தொகுதியின் மேல்மாடியானது பொழுதுபோக்குக்கென நீச்சல் தடாகம், சொகுசான உயர்தர இருக்கைகள், நடைப்பயிற்சிக்கானப் பாதை, உடற் பயிற்சிக்கூடம் ஆகியவற்றைக் கொண்டுள்ளமையானது கொழும்பு 5, நாவல வீதியில் அமைந்துள்ள ‘The Heights" ஐ மேலும் கவர்ச்சியாக்குவதுடன், அருகிலேயே கொழும்பின் அதி மதிப்புமிக்க தனியார் வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகள் அமைந்துள்ளமை மேலும் சிறப்பு சேர்க்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X