2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் ஒடெல் கிளை இடமாற்றம்

Gavitha   / 2017 பெப்ரவரி 28 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி கொழும்பு 7இல் அமைந்துள்ள ODEL கிளையை, அதிகளவு இடவசதிளுடன் 16, வோர்ட் பிளேஸ், கொழும்பு 7 எனும் முகவரிக்கு இடமாற்றியுள்ளது. இந்தக் கிளையின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமாக, வினைத்திறன் வாய்ந்த வகையில் மற்றும் இலகுவாக சகல சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.  

பெப்ரவாரி மாதம் 21ஆம் திகதி உத்தியோகபூர்வமாக நடைபெற்ற இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், வாடிக்கையாளர்கள், விருந்தினர்கள் மற்றும் வங்கியின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.  

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் கிளைகளின் தலைமை அதிகாரி சிஹான் டேனியல் கருத்துத் தெரிவிக்கையில், “தற்போது எமது வாடிக்கையாளர்கள் அதிகளவு இடவசதி, நவீன வசதிகள் படைத்த மற்றும் சிறந்த வடிவமைப்பிலமைந்த வங்கியியல் சேவைகளை எமது நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியில் அனுபவிக்க முடியும். எமது இந்தப் புதிய கிளையில் தாராளமாக வாகன தரிப்பிட வசதிகள் காணப்படுவதுடன், வாடிக்கையாளர்களின் சௌகரியத்தை கவனத்திற் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு இலகுவாக, துரிதமாக தமது கொடுக்கல் வாங்கல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். இந்தக் கிளையின் வடிவமைப்பு தொடர்பில் நாம் அதிகளவு கவனம் செலுத்திரிருந்ததுடன், வாடிக்கையாளர்களின் வரவேற்பு தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது” என்றார்.  

பிஸ்னஸ் டுடே சஞ்சிகையின் மூலமாக, இலங்கையில் காணப்படும் மிகச்சிறந்த 25 வியாபாரங்களில் ஒன்றாக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் சௌகரியம் எனும் அதன் நிலைப்பாடு என்பதற்கு, தன்வசம் கொண்டுள்ள பெருமளவான நிதிசார் பொருட்கள் மற்றும் சேவைகள் காரணமாக அமைந்துள்ளன. நாடு முழுவதும் வங்கி 93 கிளைகளைக் கொண்டுள்ளது. அத்துடன், தனது ATM வலையமைப்பை 137 பகுதிகளில் கொண்டுள்ளதுடன் Lanka Pay வலையமைப்பினூடாக 3500 க்கும் அதிகமான ATM வலையமைப்பைக் கொண்டுள்ளது. இலங்கையில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அட்டைகளை விநியோகிக்கும் ஏக உரிமையைக் கொண்ட வங்கியாகத் திகழ்கிறது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X