2025 ஜூலை 26, சனிக்கிழமை

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பாடசாலைகளுக்கு வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டம்

Gavitha   / 2017 மார்ச் 30 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளுக்கு வலுவூட்டும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த பாடசாலைகளில் நீண்ட கால அடிப்படையில் பயனளிக்கும் உதவிகளை வழங்க நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி முன்வந்திருந்தது. இவற்றில் கல்கமுவ நிதலாவ கனிஷ்ட வித்தியாலயம், இரத்தினபுரி அமுனுதென்ன கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு அரச தமிழ் கலவன் பாடசாலை போன்றன அடங்குகின்றன. இந்த நிகழ்ச்சியின் இலக்கு என்பது இந்தப் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு உதவிகளை வழங்குவதனூடாக, குறித்த பிராந்தியங்களில் மாதிரிப் பாடசாலைகளாகத் தரமுயர்த்துவதாக அமைந்துள்ளது. 

தற்போது முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் மூலமாக 2017 ஜனவரி 24ஆம் திகதி கல்கமுவ நிதலாவ கனிஷ்ட வித்தியாலயத்தில் புத்தம் புதிய, சகல வசதிகளையும் படைத்த ஆய்வுகூடமொன்று 4 மில்லியன் ரூபாய் செலவில் நிறுவப்பட்டிருந்தது. வங்கியின் மூலமாக ஒரு வருட காலப்பகுதிக்கு போதுமான 1.8 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான காகிதாதிகள், பாடசாலை விநியோக பொருட்கள், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் உதவி உபகரணங்கள் மற்றும் ஒதுக்கங்கள் போன்றவற்றை வழங்கியிருந்தது. இந்தப் பாடசாலைகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களில் பெருமளவானவர்கள் விவசாயிகள் மற்றும் உள்நாட்டு கைவினைப்பொருட்களில் ஈடுபடுவோர். இவர்களின் வாழ்வாதாரம் என்பது கடுமையான காலநிலை மற்றும் சமூகப் பொருளாதார நிலைகளால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த மூன்று பாடசாலைகளைச் சேர்ந்த 413 மாணவர்கள் இந்த நன்கொடைகளின் ஊடாக பயன்பெற்றுள்ளனர். 

இந்த நிகழ்ச்சி தொடர்பில், பதில் பொது முகாமையாளர்,  சட்டம் மற்றும் நிர்வாகம் / கம்பனி செயலாளர் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளின் தலைமை அதிகாரி தேஜா சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “சிறந்த கல்வி என்பதை விட மிகவும் உயர்ந்த அன்பளிப்பொன்று இருந்துவிட முடியாது. இந்த நிகழ்ச்சியை ஆரம்பிக்க இதுவே எமக்கு ஊக்குவிப்பாக அமைந்திருந்தது. பாடசாலை புத்தகங்கள் விநியோகங்கள் என்பதிலிருந்து சிறிதாக எமது நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தோம். எமது முயற்சிகளினூடாக சிறந்த பெறுபேறுகள் கிடைத்துள்ளன. நிதலாவ பாடசாலையில் சித்தியெய்துவோரின் எண்ணிக்கையை நீங்கள் கவனத்தில் கொள்ளும் போது எமது முயற்சிகள் கைகூடியுள்ளமை புலப்படும். 

 2009இல், நாம் ஆரம்பித்திருந்த போது, க.பொ.த. சா.தர சித்தி எய்தும் வீதம், 28 சதவீதமாக இருந்தது. 2015இல் இந்த எண்ணிக்கை 80சதவீதமாக பதிவாகியிருந்தது. தரங்களின் சராசரி பெறுமதிகளும் அதிகரித்துள்ளன. 2009இல் தரம் 5 புலமைப்பரிசில் சித்தியெய்தும் வீதம் என்பது பூச்சியமாக அமைந்திருந்தது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X