Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெஸ்லே நிறுவனத்தின் Maggi தேங்காய்ப் பால் மா, Nespray Nutri-Up மற்றும் Nescafe ஐஸ் கோப்பி (உடனடியாக பருகுவதற்கு உகந்த), ஆகிய உற்பத்திகளுக்கு, அண்மையில், இலங்கை தரக் கட்டளைகள் நிறுவனத்தின் சான்று அங்கிகார விருதுகள் நிகழ்வில், அதியுயர் தர நடைமுறைகளுக்கான இனங்காணல் அங்கிகாரம் கிடைத்துள்ளது. மேலும், மாதிரி வழங்கல் தொழிற்பாடுகளுக்காக, நிறுவனத்தின் விற்பனை ஊக்குவிப்புப் பிரிவுக்கு “சிறந்த உற்பத்தி நடைமுறைகளுக்கான” சான்று அங்கிகாரமும் இலங்கை தரக் கட்டளைகள் நிறுவனத்திடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது. இலங்கையில் தொழிற்பாட்டுப் பிரிவு ஒன்றுக்கு கிடைக்கப்பெற்ற அத்தகைய முதலாவது சான்று அங்கிகாரமாகவும் அது அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தேசிய தரக் கட்டளைகள் அமைப்பான இலங்கை தரக் கட்டளைகள் நிறுவனம், சர்வதேச தரக் கட்டளை அங்கிகாரமளிப்பு நிறுவனத்திலும் உறுப்புரிமையைக் கொண்டுள்ளது. இலங்கை தரக் கட்டுப்பாட்டு வரையறைகளுக்கு இணங்க உற்பத்தியொன்று உற்பத்தி செய்யப்படுவதை, இலங்கை தரக் கட்டளைகள் நிறுவனத்தின் சான்று அங்கிகாரம் உறுதிப்படுத்துவதுடன், அந்த உற்பத்திகளை தர உத்தரவாதத்துடன், கொள்வனவு செய்ய முடியும். கணக்காய்வுகள் மற்றும் உற்பத்தி சோதனைகள் மூலமாக நிறுவனத்தின் தர உத்தரவாத முறைமையானது, தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு, உற்பத்திகள் தரக் கட்டுப்பாடுகளைப் பேணுகின்றனவா என்ற உத்தரவாதம் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது.
இலங்கை தரக் கட்டளைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான பிரதீப் குணவர்த்தன கூறுகையில், “நெஸ்லே லங்கா நிறுவனம், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கை தரக் கட்டளைகள் நிறுவனத்துடன் உறவுமுறையைப் பேணிவந்துள்ளது. இலங்கை தரக் கட்டளைகள் நிறுவனத்தின் சான்று அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் சவால் மிக்க பணியை, வெற்றிகரமாக முன்னெடுப்பதில் ஒன்றுபட்ட குழுவாக உழைத்துள்ள நிறுவனத்துக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
இந்தச் சான்று அங்கிகாரத்தைப் பெற்றுள்ளதன் மூலமாக, தரக் கட்டுப்பாடுகள் தொடர்பான முகாமைத்துவ நடைமுறைகளைப் பேணிவருகின்ற ஒரு நிறுவனம் என்ற இனங்காணல் அங்கிகாரத்தையும் அது சம்பாதித்துள்ளது. இந்த உயர் மட்டத்திலான தர நடைமுறைகளை, நெஸ்லே லங்கா நிறுவனம் தொடர்ந்தும் பேணும் என நான் உறுதியாக நம்புகின்றேன்” என்று குறிப்பிட்டார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
6 hours ago