2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

நல்லூரில் தீவா காணி அதிர்ஷ்டம் ஆரம்பம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹேமாஸ் மனுபக்ஷரிங் நிறுவனத்தின் வர்த்தகநாமமான தீவா, அண்மையில் யாழ் நல்லூர் நகரில் அதன் வருடாந்த ‘காணி அதிர்ஷ்டம்’ 6ஆவது செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளது.   

நல்லூரைச் சுற்றிலும் அதிகளவு பக்தர்கள் ஒன்றுகூடுவதால், தீவாவின் 6ஆவது ‘காணி அதிர்ஷ்டம்’ செயற்றிட்டமானது அதிகளவான வாடிக்கையாளர்களின் பங்குபற்றலுடன் இம்முறை இடம்பெற்றது.   

தீவா ‘காணி அதிர்ஷ்டம்’ செயற்றிட்டத்தின் ஊடாக கடந்த 5 ஆண்டுகளாக இலங்கையர் பலரினதும் வாழ்வு மாற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் இச் செயற்றிட்டத்திற்காக காத்திருந்தனர். கடந்த ஆண்டுகளில் நாடுமுழுவதும் உள்ள பல்வேறு பகுதியில் தீவாவின் வருடாந்த பாவனையாளர் ஊக்குவிப்பு செயற்றிட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.  

இச் செயல்படுத்தும் செயற்றிட்டமானது வெற்றிகரமாக இரு நாட்களுக்கு முன்னெடுக்கப்பட்டதுடன், கோயிலுக்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீவா உற்பத்திகள் மற்றும் கவர்ச்சிகரமான பல பரிசுகளையும் பெற்றுக்கொண்டிருந்தனர்.

நாடுமுழுவதும் உள்ள வாடிக்கையாளர்களை உள்ளடக்கும் வகையில் இலங்கையின் பல பாகங்களிலும் தீவா செயற்படுத்தும் திட்டம் கொண்டு செல்லப்படவுள்ளது.   
‘நாம் உண்மையான உறவுகளை கட்டியெழுப்பி வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தி வருகிறோம். ‘காணி அதிர்ஷ்டம்’ செயற்திட்டம் ஊடாக கடந்த காலங்களில் பலரையும் காணி வெற்றியாளர்களாக நாம் உருவாக்கியுள்ளோம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X