2025 மே 21, புதன்கிழமை

நுட்பமான தலைமைத்துவ அறிவூட்டுவதற்காக ஜோன் மெட்டொன் இலங்கை வருகிறார்

Editorial   / 2018 மே 16 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM) இவ்வருடத்தின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றை நடாத்தவுள்ளது. ‘John Mattone in Sri Lanka’ என்ற அறிவுப் பரிமாற்றல் நிகழ்வை ஜூன் 12 ஆம் திகதி ஷங்கரி - லா கொட்டலிலும் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுடனான காலை உணவுடனான சந்திப்பை ஜூன் 13 ஆம் திகதி சினமன் கிரான்ட் கொட்டலிலும் நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.  

அப்பிள் நிறுவனத்தின் நிறுவனரான ஸ்டீவ் ஜொப்ஸின் பயிற்றுவிப்பாளரும் அதிகளவில் விற்பனையான புத்தகங்களின் எழுத்தாளருமான ஜோன் மெட்டொன், இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். அவருடனே மேற்குறிப்பிட்ட திகதிகளில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. ‘John Mattone in Srilanka’ நிகழ்வின் மூலம், இலங்கையரின் தலைமைத்துவப் பாங்கில் புதிய மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கு இடம்பெறவிருக்கும் அறிவுப்பரிமாற்றம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுடனான சந்திப்பு ஆகிய இரண்டு நிகழ்வுகளும் உயர்மட்ட முகாமைத்துவத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்குச் சிறந்த இணைப்பையும் அறிவுப் பரிமாற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும் என்பது திண்ணம்.   

ஜோன் மெட்டோன், உலகில் நுட்பமான தலைமைத்துவத்தின் முன்னோடியாகத் திகழ்கின்றார். உயர்மட்ட நிறைவேற்று அதிகாரிகளின் பயிற்றுவிப்பாளராகவும் IL Excutive Coaching செயற்பாடு மற்றும் சான்றிதழ் வழங்கும் திட்டத்தின் அமைப்பாளராகவும் 250க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ஆலோசகராக்ச் செயற்பட்டு வருகின்றார். 200க்கும் மேற்பட்ட சர்வதேச மட்டத்திலான நிறைவேற்று உத்தியோகஸ்தர்களுக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளார். இதன் மூலம் சர்வதேச அங்கிகாரத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளார்.   

இந்த இரண்டு நிகழ்வுகளின்போது, திறமை மற்றும் தலைமைத்துவ அபிவிருத்தி என்பன பிரதான அடைவுகளாக நோக்கப்படுகின்றன. தற்போதைய உலகளாவிய நடைமுறைகள், தரவுகள் மற்றும் ஒன்றிணைந்த செயற்பாடுகள் மூலம் குழும அடிப்படையில் இணைந்து வெற்றி காண்பது இதன் நோக்கமாகும். ஜோன் மெட்டொன், இந்த நிகழ்வுகளின் போது, பங்குபற்றுபவர்களின் தீர்மானங்களை மேற்கொள்ளும் திறமையை அபிவிருத்தி செய்யவும் எதிர்பார்க்கின்றார்.  

நாட்டின் அபிவிருத்திக்கு SLIM எப்போதும் பெறுமதி சேர்க்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அது, சந்தைப்படுத்தல் துறையில் பயிற்சிகளையும் பெற்றுக்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். சுமார் 50 வருடங்களுக்கு மேலாக உள்நாட்டு சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்களின் அறிவையும் செயற்பாடுகளையும் சர்வதேச மட்டத்துக்கு இட்டுச் செல்லும் வகையில் உழைத்து வருகின்றது.  

2017 ஆம் ஆண்டின் சிறந்த சிந்தனையாளருக்கான 50 தலைவர்களுக்கு விருது வழங்கலில் ஜோன் மெட்டொன் எட்டாவதாகத் தெரிவானார். ஜோன் மெட்டொனுக்கு The Globalgurus.org ஆய்வு நிறுவனம் 2015, 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் உலகின் மிகச் சிறந்த தலைவர்களின் பட்டியலில் மூன்றாம் இடம் வழங்கியுள்ளது.  

ஆய்வு நடவடிக்கைகள் , கற்பித்தல் மற்றும் தலைமைத்துவத்துக்கான ஆலோசனைச் சேவைகள் என்பவற்றுக்காக இன்னும்பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். ஜோன் மெட்டோன், The Association of Corporate  Executive Coaches (ACEC) நிறுவனத்தால்  Master Corporate Executive Coach (2013) ஆகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

உலகிலுள்ள நிறைவேற்று அதிகாரிகளுக்கான பல்வேறு உயர் தகவல்களைப் பெற்றுக்கொடுக்கும் ஒரு தளமாக CMOE.com இணையத் தளம் விளங்குகின்றது. மேற்கூறப்பட்ட சந்திப்புகளுக்கான பதிவுகளை மே மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொண்டால் விண்ணப்பதாரிகளுக்கு ஜோன் மெட்டொனின் இணையத்தள பயிற்சிப் பாடநெறி ஒன்று, 30 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு 0703 701 166   தொடர்பு கொள்ளவும். 

படப்பிடிப்பு: வருண வன்னியாராட்சி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .