Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
S.Sekar / 2022 செப்டெம்பர் 16 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் (FAO) ஊடாக இலங்கையில் விவசாயத்தை வலுப்படுத்துவதற்கு மேலதிகமாக 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவகத்தின் (USAID) ஊடாக அமெரிக்கா அறிவித்துள்ளது. காங்கிரஸின் அனுமதியின் அனுமதி வழங்கலுக்கு அமைய, இந்த புதிய நிதியானது, இந்த வருடத்தில் FAOஇன் ஊடாக இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட USAIDஇன் நிதியினை 46 மில்லியன் அமெரிக்க டொலர்களாக்கும். எதிர்வரும் பாரிய பயிர்ச்செய்கை பருவமான 2022-2023 பெரும்போகத்தினை (ஒக்டோபர்-மார்ச்) மற்றும் அதன் தொடர்ச்சியான 2023 யால போகத்தினை (ஏப்ரல்-ஓகஸ்ட்) இந்த நிதி பிரதானமாக இலக்கு வைத்துள்ளது. நெல் உற்பத்தியை அதிகரித்து, நீடித்த உணவு நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு அத்தியாவசிய உரங்களை மற்றும் பணப்பரிமாற்றங்களை வழங்குவதற்கு அது வழங்கப்படும்.
விவசாயிகள் மற்றும் FAO பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது USAIDஇன் நிர்வாகி சமந்தா பவரினால் இந்த நிதியுதவி அறிவிக்கப்பட்டது. 'இன்று இந்த விவசாயிகளுடன் உரையாடிதில் இருந்தும், அவர்களுடைய தேவைகளை கேட்டறிந்ததில் இருந்தும், அமெரிக்க மக்களிடம் இருந்து இலங்கைக்கு உதவியாக மேலதிகமாக 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை நான் அறிவிக்கின்றேன். USAID ஊடாக, அடுத்த பயிர்ச்செய்கை போகம் ஆரம்பிக்கவுள்ள நேரத்தில் 1 மில்லியன் உள்நாட்டு விவசாயிகள் உரங்கள் மற்றும் விவசாயத்திற்குத் தேவையான பொருட்களை பெறுவதற்கு இந்த நிதி உதவும்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
டிரிப்பல் சுப்பர் பொஸ்பேட் (TSP) உர விநியோகம் ஊடாக நெல் விவசாயிகளின் உற்பத்தி இயலுமையை வலுப்படுத்துவதற்கு நிதியினை FAO பயன்படுத்தும். நாட்டில் கடந்த இரண்டு பயிர்ச்செய்கை போகத்தின் போதும் கிடைக்கப் பெறாத TSP ஆனது, அடுத்து வரும் விவசாய போகங்கள் இலங்கை மக்களுக்கு உணவூட்டுவதனை உறுதி செய்வதற்கு, அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படும்.
TSPஇற்கு மேலதிகமாக, உலர் மற்றும் இடை வலயங்களில் மிகவும் வறிய மாவட்டங்களில் இருந்து 1 ஹெக்டேயர் (2.5 ஏக்கர்) வரை வயல்நிலங்களைக் கொண்டுள்ள 186,000 சிறு விவசாயிகளுக்கு தலா 50 கிலோகிராம் யூரியா வழங்கப்படும். சுயநுகர்வுக்காக நெல் பயிரிடும், கிராமப் புறங்களைச் சேர்ந்த எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்களாக சிறு விவசாயிகள் உள்ளனர். தொடர்ச்சியாக இரண்டு பருவங்களாக உரப் பற்றாக்குறையினால், பயிர்ச்செய்கை பெருமளவில் பாதிக்கப்பட்டதுடன், பெரும்பாலான விவசாயிகள், தமது உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை நிறைவேற்றுவதற்காக எதிர்மறையான பயிர்ச்செய்கை உபாயங்களை (அடகு வைத்தல், கடன் வாங்குதல், சேமிப்பில் கைவைத்தல், போன்ற) நாடினர்.
அத்தகைய எதிர்மறை எதிர்கொள்ளல் உபாயங்களை தடுப்பதற்கு, 0.4 ஹெக்டேயர்களுக்கு குறைவான அல்லது சமமான அளவு காணியில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும், அடையாளங் காணப்பட்ட சிறுவிவசாயிகளில் இலகுவில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய சுமார் 50,000 பேருக்கு, எதிர்வரும் போகத்தில் அவர்களது உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தினை வலுப்படுத்துவதற்கு பணப் பரிமாற்றங்கள் வழங்கப்படும்.
இந்த அறிவிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான FAO பிரதிநிதி விமலேந்திர ஷரண், நாட்டின் இயலுமையை, எதிர்வரும் பருவங்களில் விரிவான நெல் உற்பத்தியை நோக்கி பங்களிப்பதற்கு குறிப்பாக இலகுவில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய விவசாயிகளின் இயலுமையை வலுப்படுத்துவதற்கு தக்க சமயத்திலான, பரந்த பங்களிப்புக்காக அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்தார்.
“USAIDஇனால் வழங்கப்பட்ட உதவியின் ஊடாக, எதிர்வரும் பயிர்ச்செய்கை போகங்கள் பாதிக்கப்படாதிருப்பதனை உறுதி செய்வதன் மூலம், இலங்கையில் உணவு பாதுகாப்பினை FAOஇனால் வலுப்படுத்த முடியும் என்பதுடன், தற்போதைய நெருக்கடியின் மோசமான விளைவுகளால் இலகுவில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய சிறு விவசாயிகளைப் பாதுகாக்க முடியும்' என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago