2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் ஊழியர்கள் கௌரவிப்பு

Editorial   / 2018 ஜூலை 19 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் 19 வருட பூர்த்தியை முன்னிட்டு, ‘Milestones - In Appreciation of Great Journeys’ எனும் தொனிப்பொருளில் கொழும்பு ஹில்டன் ரெசிடென்சிஸ் ஹோட்டலில் ஊழியர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. வங்கியுடன் 15 வருடங்களுக்கு மேலாக இணைந்திருக்கும் ஊழியர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.  

ஒவ்வொரு ஊழியருக்கும் பெறுமதி வாய்ந்த நினைவுச்சின்னமொன்று பரிசளிக்கப்பட்டிருந்தது. வங்கியின் தலைமை அதிகாரி கிரிஷான் பாலேந்திரா இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன், வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவ பணிப்பாளருமான ரேணுகா பெர்னான்டோ அடங்கலாக, வங்கியின் கூட்டாண்மை முகாமைத்துவ அணியினரும் பங்கேற்றிருந்தனர்.   

இந்நிகழ்வு தொடர்பில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் மனித வளங்கள் பிரிவின் நிறைவேற்று பதில் தலைவர் ரமணிகா உனம்பூவே கருத்துத் தெரிவிக்கையில், “கௌரவிக்கப்பட்ட ஊழியர்களில் பெருமளவானோர் நேஷன்ஸ் ட்ரஸ்ட் குடும்பத்தில் ஆரம்ப காலம் முதல் இணைந்துள்ளவர்கள் ஆவார். கடந்த 19 வருடங்களில், இலங்கையின் வங்கித்துறையில் மாபெரும் செயலணியாக வளர்ச்சியடைந்துள்ளோம். பல நடவடிக்கைகளின் முன்னோடிகளாகத் திகழ்ந்துள்ளோம். இலங்கையில் பல புரட்சிகரமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் முன்னோடியாக திகழ்கிறது. இதில் நீடித்த வங்கிச் சேவை நேரம் மற்றும் இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வங்கிச் சேவையான FriMi ஆகியன அடங்குகின்றன. எமது சிறந்த சாதனைகளில், கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர்மைத்தன்மை ஆகியவற்றை கடந்த இரு தசாப்த காலப்பகுதியில் வெளிப்படுத்தியிருந்தோம். எனவே, அவர்களின் சிறந்த பயணத்தை கொண்டாட முடிந்ததையிட்டு பெருமை கொள்வதுடன், எம்முடன் நீண்ட காலமாக இணைந்திருக்கும் ஊழியர்கள், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியில் தமது தொழில் வாழ்க்கையை வெற்றிகரமாக கட்டியெழுப்பியுள்ளனர்” என்றார்.   

19ஆவது வருட பூர்த்தி நிகழ்வின் போது, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியில் 10 - 14 வருடங்களாக இணைந்திருக்கும் ஊழியர்களும் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X