2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் காலி கிளை புதிய முகவரியில்

Editorial   / 2018 ஜூன் 08 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் காலி கிளை, இல. 144, மாத்தறை வீதி, பெட்டிகலவத்தை, காலி எனும் முகவரிக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுமார் ஒரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக, காலிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி கிளை, சேவைகளை வழங்கி வருவதுடன், இந்த ஆண்டு, தனது பத்து வருட பூர்த்தியை கொண்டாடியிருந்தது. 

கிளையின் புதிய வளாகத்தில் பெருமளவு இடவசதி காணப்படுவதுடன், நவீன வசதிகள் காணப்படுகின்றன. இதனூடாக வாடிக்கையாளர்களுக்குச் சௌகரியமான வகையில் வினைத்திறனாக தமது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்தக் கிளையில் சகல வசதிகளையும் படைத்த லீசிங் நிலையம் காணப்படுவதுடன், நவீன வசதிகளையும் கொண்டுள்ளது.   

காலி கிளையை புதிய முகவரிக்கு இடம்மாற்றும் வைபவம் ஜூன் மாதம் நான்காம் திகதி நடைபெற்றது. 
வங்கியின் நீண்ட கால வாடிக்கையாளர்கள், உயர் அதிகாரிகள், ஊழியர்கள் இதர விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.  

புதிய முகவரிக்கு இடம்மாற்றம் செய்யப்பட்ட காலி கிளை பற்றி நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் கிளை வலையமைப்பின் சிரேஷ்ட உப தலைவர் ஷிஹான் டேனியல் கருத்துத் தெரிவிக்கையில், ‘புதிய முகவரியில் நாம் ஏற்படுத்தியுள்ள அதிகளவு இடவசதி, முறையாக கட்டமைக்கப்பட்ட பகுதி போன்றவற்றினூடாக வாடிக்கையாளர்கள் அதிகளவு அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கும். புதிய கிளையில் பெருமளவு வாகன தரிப்பிட வசதி காணப்படுவதுடன், வாடிக்கையாளர்களை கவனத்தில் கொண்டு, சௌகரியமான முறையில் வங்கிக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பற்ற வங்கியியல் அனுபவத்தை உறுதி செய்யும் வகையில், வடிவமைப்பு மற்றும் அலங்காரம் போன்றவற்றில் நாம் அதிகளவு கவனத்தை செலுத்தியிருந்தோம். இதனூடாக வாடிக்கையாளர்கள் வரவேற்பு, ஓய்வு, சௌகரியம் போன்றவற்றுடன் வியாபார கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதை உணர்வார்கள். எமது புதிய பகுதிக்கு காலி வாடிக்கையாளர்களை நாம் வரவேற்கிறோம்” என்றார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .