Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2020 மே 10 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்களுக்கு உதவிகள் மற்றும் சேவைகளை வழங்கும் நோக்குடன், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி தனது நடமாடும் ATM இயந்திரத்தைக் கொண்ட வண்டிச் சேவையை முன்னெடுக்கின்றது. வாடிக்கையாளர்களின் பிரதான வங்கியியல் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இந்த நடவடிக்கை அமைந்திருப்பதுடன், நேஷன்ஸ் மொபைல் வங்கிச் சேவை மற்றும் இணைய வங்கிச் சேவை ஆகியவற்றுக்கு தம்மை பதிவு செய்து கொள்ளும் வசதியும் இதன் போது வழங்கப்படும்.
தினசரி மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 6 மணி வரையான காலப்பகுதியில் தொடர்மனைகள் அடங்கலாக மக்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்கு நடமாடும் ATM இயந்திரத்தைக் கொண்ட வண்டி பயணம் செய்து சேவைகளை வழங்குகின்றது. நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி வாடிக்கையாளர்கள், LankaPay வலையமைப்பைச் சேர்ந்த ஏனைய எந்தவொரு உள்நாட்டு வங்கியின் வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் ATM அட்டைகளை கொண்டிருப்போருக்கும் இந்த சேவையை பயன்படுத்தி ரூ. 100,000 வரை மீளப் பெற முடியும்.
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பிரத்தியேகமான சேவையினூடாக, இந்த நடமாடும் ATM இயந்திரத்தைக் கொண்ட வண்டி இயங்கும் காலப்பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக அந்த வண்டி எப்பகுதியிலுள்ளது என்பது பற்றிய தகவலை அறிந்து கொள்ள முடியும். நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் Facebook பக்கத்தில் (www.facebook.com/nationstrustbank) இந்த லிங்க் பிரசுரிக்கப்படும். டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்ட மற்றுமொரு சேவையாக இது அமைந்துள்ளதுடன், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி சந்தையில் இந்த சேவையை முதன் முதலில் அறிமுகம் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டம் தொடர்பில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி ஹேமந்த குணதிலக கருத்துத் தெரிவிக்கையில், ”உலகளாவிய ரீதியில் COVID-19 தொற்று பரவும் இந்த காலப்பகுதியில், எமது வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் ஆகியன எமக்கு மிகவும் முக்கியமானதாகும். மக்கள் தமது இல்லங்களில் அடைபட்டிருக்கும் போது, பணத்தை அணுகக்கூடிய வசதி முக்கியமானதாகும். இதனால், நாம் நடமாடும் நேஷன்ஸ் மொபைல் ATM சேவையை அறிமுகம் செய்துள்ளதுடன், அவை பயணிக்கும் இடங்கள் பற்றிய உடனடி தகவல்கள் அடங்கிய லிங்க் ஒன்றையும் செயற்படுத்தியுள்ளோம். இதனூடாக எமது வாடிக்கையாளர்களுக்கு, எமது நடமாடும் ATM இயந்திரத்தைக் கொண்ட வாகனம் காணப்படும் பகுதியை கண்காணித்து, காத்திருக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ள முடியும்.” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
25 minute ago
39 minute ago