Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 மே 07 , மு.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நொரிடாகே லங்கா போர்சலைன் (பிரைவேட்) லிமிட்டட் (NLPL) நிறுவனத்தால் ‘Go Green’ கருத்திட்டத்தின் கீழ் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட ‘காபன் பதிப்பு தடம்’ (Carbon Foot Print) செயற்றிட்டத்துக்கு, அண்மையில் நடைபெற்ற JASTECA Awards 2017 விருது வழங்கல் நிகழ்வில் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு, நிலைபேண்தகு தன்மைக்கான வெள்ளி விருது வழங்கப்பட்டு ள்ளது.
“நாட்டு மக்களுக்கு நீண்டகால அடிப்படையிலான அனுகூலங்களைக் கொண்டு வரக் கூடிய நிலைபேண்தகு அபிவிருத்திக்கு உதவுவதற்காக, நாம் மேற்கொண்ட தொடர்ச்சியான முன்முயற்சிகளுக்குக் கிடைக்கப் பெற்றிருக்கின்ற இந்த அங்கிகாரத்துக்கு நாங்கள் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம்” என்று நோரிடாகே லங்கா போர்சலைன் (பிரைவேட்) லிமிட்டட் (NLPL) நிறுவனத்தின் பிரதித் தலைவர் யோசினரி சிமாயா தெரிவித்தார்.
மேலும், “ஒட்டுமொத்தமாக மனிதநேயத்தை நிலைபேணிக் கொள்வது தொடர்பில் முதன்மையான பொறுப்பைக் கொண்ட நிறுவனமாக நோரிடாகே லங்கா போர்சலைன் (பிரைவேட்) லிமிட்டட் திகழ்கின்றது. எமது கூட்டாண்மை, சமூகப் பொறுப்புத் திட்டங்களின் ஊடாக, இந்த இலக்கு அடையப் பெற்றுள்ளது என்பதையும் ஆதாரபூர்வமாக உலகின் ஒவ்வொரு பாகத்திலும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற எமது வாடிக்கையாளர் தளத்துக்கு, இவ்விருது எடுத்துக் காட்டுகின்றது” என்று அவர் குறிப்பிட்டார்.
ஜப்பான், இலங்கை தொழில்நுட்ப மற்றும் கலாசார ஒன்றியம் (JASTECA) ஆனது, அரச, தனியார் துறை வியாபார நிறுவனங்கள், தங்களது வியாபாரக் கொள்கையின் ஓர் அங்கமாகக் கூட்டாண்மை சமூகப் பொறுப்பை (CSR) உள்வாங்கச் செய்வதையும் அந்நிறுவனங்களைப் பயிற்றுவிப்பதையும் நோக்காகக் கொண்டு, அவ்வாறு செயற்படும் நிறுவனங்களின் முன்முயற்சிகள், அர்ப்பணிப்பை அங்கிகரித்துப் பாராட்டுவதற்காக JASTECA கூட்டாண்மை சமூகப் பொறுப்பு விருதுகள் என்ற பெயரிலான ஒரு போட்டியை ஏற்பாடு செய்கின்றது.
JASTECA ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவர் அயன் டயஸ் அபேசிங்கவின் நினைவாக, இந்தப் புத்தாக்கமான முன்னெடுப்பு வருடாந்தம் மேற்கொள்ளப்படுகின்றது.
கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு நிறுவனங்களுக்கு ஊக்கமளிப்பதன் ஊடாக, சமூகத்துக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் அதேபோன்று இயற்கைச் சூழலுக்கும் சிறந்ததொரு பங்களிப்பை வழங்கச் செய்வதே இந்த விருது வழங்கல் நிகழ்வை ஏற்பாடு செய்வதன் நோக்கமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
33 minute ago
44 minute ago