2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பாணந்துறையில் ஐந்து நட்சத்திர ஹொட்டல்கள் திறப்பு

Gavitha   / 2017 ஜனவரி 17 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில், சீனாவினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது ஐந்து நட்சத்திர ஹொட்டல் நேற்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாணந்துறை நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ஹொட்டலுக்கு Jie Jie பீச் ஹொட்டல் என பெயரிடப்பட்டுள்ளது.  

இலங்கையின் முதலாவது சூரிய சக்தியில் முழுமையாக இயங்கும் ஹொட்டலாக அமைந்துள்ளதுடன், இந்த நிர்மாணப்பணிகளை சீனாவின் பொறியியலாளர்கள் மேற்பார்வை செய்திருந்தனர். சீனாவின் ஜே.ஜே.கொன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் பாணந்துறை, வைட் ஹெவன் ஹொட்டல்ஸ் ஆகியன இணைந்து முன்னெடுத்திருந்த இந்த ஹொட்டலின் நிர்மாணச் செயற்பாடுகளுக்காக 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன.  

பீஜிங் ஒலிம்பிக் மைதானத்தை நிர்மாணித்த ஜே.ஜே.கொன்ஸ்ட்ரக்ஷன்ஸ், இந்த ஹொட்டலின் நிர்மாணப்பணிகளையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கையில் நிறுவப்பட்டுள்ள இந்த Jie Jie பீச் ஹொட்டல், தமது முதலாவது வெளிநாட்டு செயற்றிட்டமாக அமைந்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ஜே.ஜே.லீ தெரிவித்தார். காலி மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் மேலும் இரு ஹொட்டல்களை நிர்மாணிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X